பலரும் செல்லாது என்று நினைத்த.. இந்த ரூபாய் நாணயம் செல்லுமாம்.. ஆர்பிஐ வெளியிட்ட செம அறிவிப்பு
டெல்லி: ஒரு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரையிலான நாணயங்களைக் கொடுத்து பொருட்கள் வாங்கும்போதெல்லாம், ஒருவிதக் குழப்பம் நிலவுவதைப் பலரும் காணலாம். சில நாணயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், 20 ரூபாய் நாணயங்கள் உள்ளிட்ட நாணயங்கள் வடிவிலானவற்றைச் சில கடைக்காரர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் செல்லாது எனக் கூறித் திருப்பி அனுப்புகின்றனர்.
இதனால் பொதுமக்கள் மத்தியிலும் குழப்பம் நீடித்து, இதுபோன்ற நாணயங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தக் குழப்பமான சூழ்நிலையை அகற்ற இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி விளக்கம்
சந்தையில் நிலவும் இந்த நாணயம் தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாணயங்கள் குறித்த எந்த ஆதாரமற்ற வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. 1, 2, 5, 10, 20 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்றும், முழுமையாகப் புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரே மதிப்புள்ள நாணயங்கள் பலவித வடிவமைப்புகளில் இருந்தாலும் எவ்விதப் பிரச்சனையும் இல்லை. ஒரே வடிவிலான நாணயங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற பொதுவான தவறான எண்ணம் உண்மையில்லை. ஒரே மதிப்பில் பல வடிவமைப்புகள் வெளிவருவது சகஜம் என்றும், அவை அனைத்தும் செல்லத்தக்கவை என்றும் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, எந்த வகையான நாணயத்தைக் கையாள்வதிலும் குழப்பம் அடையத் தேவையில்லை.
செல்லுபடியாகும் நாணயத்தை ஒரு வர்த்தகர் ஏற்க மறுத்தால் சிரமங்கள் ஏற்படலாம். அதைப் பணமாக மாற்ற உங்கள் அருகிலுள்ள வங்கியைத் தொடர்புகொள்ளலாம். இந்திய நாணயமாக ஒவ்வொரு நாணயத்திற்கும் சம மதிப்பு, செல்லுபடியாகும் தன்மை உண்டு என்பது ரிசர்வ் வங்கியின் தெளிவான செய்தி. அளவு, வடிவமைப்பு அல்லது பளபளப்பு வேறுபட்டிருந்தாலும், அனைத்து நாணயங்களும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வங்கி கணக்குகள் மூடப்படும்
அதேபோல் மூன்று வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும் நடவடிக்கைகளை எடுத்துள்ள ஆர்பிஐ தெரிவித்துள்ளது. கடந்த 1 மாதங்களாக இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி செயல்படாத கணக்குகள் (Dormant), செயலற்ற கணக்குகள் (Inactive) மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (Zero Balance Accounts). முன்னர் ஒரு பரிந்துரைக்கப்பட்ட நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது ஒரு கணக்கில் நான்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களைச் சேர்க்கலாம்.
பரிந்துரைக்கப்பட்ட நபர்களைச் சேர்க்கும் வசதி, ஒரே நேரத்தில் (Simultaneous) அல்லது அடுத்தடுத்து (Successive) என இரு வடிவங்களில் கிடைக்கும். பாதுகாப்பான வைப்பு லாக்கர்கள் மற்றும் பாதுகாப்பான உடைமைகளுக்கும் புதிய விதிகள் பொருந்தும். கணக்கு வகைகளும், அவை மூடப்படுவதற்கான காரணங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
செயல்படாத கணக்கு (Dormant Account) என்பது இரண்டு வருடங்களாக பரிவர்த்தனை இல்லாத கணக்குகள். செயலற்ற கணக்கு (Inactive Account) என்பது பன்னிரண்டு மாதங்களாக வாடிக்கையாளர் தொடங்கி எந்தப் பரிவர்த்தனையும் செய்யாத கணக்குகள். இருப்பு இல்லாத கணக்கு (Zero Balance Account) என்பது கணக்கு திறக்கப்பட்ட பிறகு நீண்ட காலத்திற்குப் பணப்பரிமாற்றம் இல்லாத கணக்குகள்.
செயல்படாத கணக்கு மூடப்படும்
நீண்ட காலமாக பரிவர்த்தனை இல்லாத கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. எனவே, அத்தகைய கணக்குகளை மூடுவது பாதுகாப்பான வங்கிச் சூழலை உறுதி செய்யும். ரிசர்வ் வங்கியின் புதிய பரிந்துரை விதிகள் நவம்பர் 20, 2025 முதல் அமலுக்கு வருகின்றன.
வங்கிக் கணக்குகள், நிலையான வைப்புநிதிகள், லாக்கர்கள் மற்றும் பாதுகாப்பான உடைமைகளுக்கு வாடிக்கையாளர்கள் நான்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களைச் சேர்க்க முடியும். இது குடும்ப உறுப்பினர்களுக்கு கோரிக்கை செயல்முறையை எளிதாக்கும். பரிந்துரையில் இரண்டு முக்கிய விருப்பங்கள் உள்ளன.
வங்கிப் பரிவர்த்தனைகள் சிக்கல்
ஒரே நேரத்தில் பரிந்துரை (Simultaneous Nomination) முறையில் அனைத்து பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும். அடுத்தடுத்து பரிந்துரை (Successive Nomination) முறையில் ஒருவர் தகுதி பெற்ற பிறகு மற்றொருவர் தகுதி பெறுவார். இந்த புதிய விதிகளின் மூலம், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் பரிந்துரைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.
இறந்த கணக்கு வைத்திருப்பவர்களின் நிதியை விரைவாகச் சரிசெய்வது, பழைய, செயலற்ற கணக்குகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது, வங்கி மோசடிகளைக் குறைப்பது போன்ற பலன்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் கணக்கு பராமரிப்பு குறித்து அதிக விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் பெறுவார்கள்.
புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வரும். செயலற்ற, செயல்படாத, மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் இந்த விதிகளால் பாதிக்கப்படும். நான்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள். பரிந்துரை வகைகள்: ஒரே நேரத்தில் மற்றும் அடுத்தடுத்து. வாடிக்கையாளர் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, விரைவான கோரிக்கை செயல்முறை ஆகியவையே இதன் இலக்கு.
மூடப்படும் வங்கி கணக்குகள்
செயலற்ற கணக்குகளை செயல்படுத்துவதும், பரிந்துரைகளை புதுப்பிப்பதும் வாடிக்கையாளரின் பொறுப்பு. கணக்குகளை கண்காணித்து, சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை அனுப்புவது வங்கியின் பொறுப்பு. நவம்பர் 1 முதல் இதை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கணக்கு செயலற்ற நிலையில் இருந்தால், அதைச் செயல்படுத்துவதற்கு சிறு பரிவர்த்தனைகளைச் செய்ய வேண்டும். நான்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களைச் சேர்க்க வங்கி அல்லது நிதி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். தேவையில்லாத இருப்பு இல்லாத கணக்குகளை மூடுவது நல்லது. அறிவிப்புகளைப் பெற தொடர்பு விவரங்கள் மற்றும் KYC-ஐ புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிகள் வங்கி முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கான ஒரு முக்கிய படியாகும். சிரமங்களைத் தவிர்க்க, அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களும் தங்கள் கணக்குகளைத் தவறாமல் சரிபார்த்து, புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications