இந்தியாவில் கொரோனா அதிகரிக்க இந்த மூன்று விஷயங்கள்தான் காரணம்.. இந்திய மருத்துவ கூட்டமைப்பு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவல் அதிகரித்தால் மருத்துவமனைகளில் தயார் நிலையை ஏற்படுத்துவதற்காக கொரோனா தடுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. இன்றும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதற்கான காரணம் என்ன? என்பதை இந்திய மருத்துவ கூட்டமைப்பு விளக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. கொரொனா பாதிப்பு வெகுவாக குறைந்து நிம்மதி பெருமூச்சு விட்டு இருந்த மக்களுக்கு தொற்று பாதிப்பு தடாலடியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,676- ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் தொற்று பாதிப்பு வேகமாக உயரும் பட்சத்தில், சென்றால், அதை எதிர்கொள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக கொரோனா பாதுகாப்பு தடுப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது. பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து இருப்பதற்கான காரனங்கள் என்ன என்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு 3 காரணங்களை பட்டியலிட்டுள்ளது.
1. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அளிக்கப்பட்ட தளர்வு
2. கொரோனா பரிசோதனைகளை போதிய அளவு நடத்தாது
3. புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகியிருப்பது
இந்த மூன்றூ காரணங்களுமே நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு 4-5 நாட்களில் இருமடங்காக அதிகரித்து இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தொற்று பாதிப்பு தற்போது அதிகரிக்க XBB.1.16 கொரோனா வைரஸே காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். தொற்று பாதிப்பின் தீவிரம் அதிகம் இல்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றாலும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.. அப்போது தான் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications