அதானி தனது நண்பர் இல்லைனு பிரதமர் மோடி நிரூபித்து காட்டட்டும்.. லோக்சபாவில் கொந்தளித்த திருமாவளவன்
அதானி உங்கள் நண்பர் இல்லை என்றால் அதை பிரதமர் மோடி நிரூபித்து காட்ட வேண்டும்- திருமாவளவன்
டெல்லி: அதானி உங்கள் நண்பர் இல்லை என்பதை பிரதமர் நரேந்தி மோடி உறுதிப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் நாடாளுமன்றத்தில் கொந்தளித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2023-2024 ஆம் நிதியாண்டுக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளும்படியான திட்டங்கள் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள்.

அதானி விவகாரம்
இதில் அதானி விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. மக்களவையில் எம்பி ராகுல் காந்தி பேசுகையில் மோடி அதானி உறவை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அதானிக்கு ஆதரவாக விதிகள் புறக்கணிக்கப்பட்டன. தமிழகம், கேரளா முதல் இமாச்சல் வரை எல்லா இடங்களிலும் அதானியின் பெயரை கேட்கிறோம்.

அதானி அதானி
இது வெறும் அதானி அதானி இல்லை. அதானி எந்த தொழிலில் இறங்கினால் தோல்வியடைவது இல்லையே ஏன் என மக்கள் கேட்கிறார்கள் என்றார். மேலும் மோடியுடன் அதானி இருக்கும் புகைப்படத்தை மக்களவையில் ராகுல் காந்தி காட்ட விரும்பினார். ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. பிரதமருடனான அதானியின் உறவு என்பது பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது என்றார்.

காங்கிரஸ் கட்சி
அது போல் அவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு 13 மடங்கு அதிகரித்துவிட்டது என அதானியின் பெயரை குறிப்பிடாமல் பேசினார். அது போல் மஹுவா உள்ளிட்ட உறுப்பினர்களும் அதானி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

பிரதமர் மோடி
இதையடுத்து பிரதமர் மோடி பேச தொடங்கிய போது எதிர்க்கட்சியினர் அதானி அதானி அதானி என கோஷமிட்டனர். அப்போது ஆளும் கட்சி எம்பிக்கள் பதிலுக்கு மோடி மோடி மோடி என கோஷமிட்டனர். இந்த விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில் ,இந்த அரசு ஏழை எளிய மக்களுக்கு எதிரான அரசு என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை உள்ளது.

விளிம்பு நிலை
இது விளிம்புநிலை மக்களுக்கு விரோதமான அரசு, குறிப்பாக தலித் விரோத அரசு, முஸ்லீம் விரோத அரசு, கிறிஸ்துவ விரோத அரசு என்பதை நிதி ஒதுக்கீடு செய்வதிலிருந்தே அறிய முடிகிறது. எளிய மக்கள் உழைக்கிற மக்கள் அன்றாடம் வேலை வாய்ப்பை பெற வேண்டும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உருவாக்கப்பட்ட திட்டம் 100 நாட்கள் வேலை திட்டம். அந்த திட்டத்திற்கு இந்த நிதியாண்டு ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக இருக்கிறது.

பட்ஜெட் ஒதுக்கீடு
கடந்த ஆண்டு 80 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் 60 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. இதனால் மூலம் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 நாட்களுக்குக் கூட வேலைவாய்ப்பை அளிக்க முடியாத அளவு இருக்கிறது. எனவே எளிய மக்களை சுரண்டுவதிலும் ஒடுக்குவதிலும் இந்த அரசு குறியாக இருக்கிறது என்பதை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்துள்ளதன் மூலம் உணர முடிகிறது. எனவேதான் இந்த அரசு எளிய மக்களுக்கு விரோதமான அரசு என நான் குற்றம்சாட்டுகிறேன்.

தலித் மக்களுக்கு நிதி ஒதுக்கீடு
அது போல் தலித் மக்களுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இந்த ஆண்டு கூடுதலாக நிதியை ஒதுக்கவில்லை. தலித்துகளின் நலன்களில் அக்கறை செலுத்தவில்லை. சிறுபான்மையின நலத்துறைக்கு கடந்த ஆண்டு ரூ. 5,020 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில் இந்த ஆண்டு ரூ3097 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. முதல் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படக் கூடிய ஸ்காலர்ஷிப் தொகை ஏறத்தாழ ரூ 1000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் அடிவயிற்றிலேயே கை வைக்கக் கூடிய அரசாக இந்த அரசு இருக்கிறது.

ஆராய்ச்சி படிப்பு
மவுலானா ஆசாத் தேசிய ஃபெல்லோஷிப் திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. முஸ்லீம் மாணவர்கள் ஆராய்ச்சி பிரிவுகளில் கல்வி பெறும் வாய்ப்புகளை இந்த அரசு ஒழித்திருக்கிறது. கிறிஸ்துவர், முஸ்லீம் போன்று மதம் மாறிய மக்களுக்கு ஒதுக்கீடு தர தடையாக உள்ள presidential order 1950 ஐ நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து அவர்களுக்குரிய இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு அரசு ஆவனச் செய்ய வேண்டும்.

சனாதனமயமாதல்
ஒரு புறம் சனாதனமயமாதல், இன்னொரு புறம் கார்ப்பரேட்மயமாதல் என்பதே இந்த அரசின் கொள்கையாக இருக்கிறது. அதானியை விசாரிக்க வேண்டும். அதானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அதானி தனது நண்பர் இல்லை என்பதை பிரதமர் மோடி உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு திருமாவளவன் பேசியிருந்தார். பிரதமர் மோடி பேசிய போது சேற்றிலும் தாமரை மலரும் என்றார். மேலும் தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சிகளை கலைத்த காங்கிரஸுடன் ஏன் திமுக கூட்டணி வைத்திருக்கிறது என கேள்வி எழுப்பினார். மேலும் நேருவின் பெயரை போட்டுக் கொள்ளாமல் காந்தியின் பெயரை தங்கள் பெயர்களில் சேர்த்துக் கொண்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மோடியின் இந்த பேச்சுக்கு அவையில் கரகோஷம் எழுந்தது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications