பவுத்தம் தழுவிய ராஜேந்தி பாலுக்கு பாராட்டு.. டெல்லியில் ஜாதி ஒழிப்பு பேரணியில் பங்கேற்ற திருமாவளவன்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் தலைமையில் இன்று சாதி ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.
ராஜேந்திர பால் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததாகவும் திருமாவளவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராஜேந்திர பால் தலைமையில் 10,000 பேர் பவுத்த மதம் தழுவிய நிலையில், திருமாவளவன் டெல்லிக்கு பயணப்பட்டு அவரை பாராட்டியுள்ளார்.

பௌத்த மதத்தில் இணைவு
தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்த ராஜேந்திர பால சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அதாவது, டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு பௌத்த மதத்திற்கு மாறியது போல 10,000 இந்துக்கள் தங்களை பௌத்த மத்தில் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி ராஜேந்திர பால் தலைமையில் கடந்த 5ம் நடத்தது.

நெருக்கடி
1956ல் அம்பேத்கர் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டபோது வாசித்த 22 உறுதிமொழியை இந்த நிகழ்வில் பங்கேற்ற மக்களும் வாசித்தனர். இந்த நிகழ்ச்சி பாஜகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமைச்சர் ராஜேந்திர பால் இந்து மக்களுக்கு எதிராக செயல்படுவதாக தொடர் விமர்சனங்களை பாஜக முன்வைக்கத் தொடங்கியது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்த நிலையில் இந்த சர்ச்சை அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

ராஜினாமா
ராஜேந்திர பால் மற்றும் அவர் சார்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சி இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்று பாஜகவின் போஸ்டர் பிரசார இயக்கத்தை மேற்கொண்டனர். இந்த நெருக்கடியையடுத்து ராஜேந்திர பால் அமைச்சர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இதற்கு பாஜகவின் நெருக்கடிதான் காரணம் என்று வெளிப்படையாகவே அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்திலிருந்து அம்பேத்கர் நினைவிடம் வரை அவரது தலைமையில் மக்கள் பேரணி சென்றனர்.

சாதி ஒழிப்பு பேரணி
இந்த பேரணியில் தமிழ்நாட்டிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், "டெல்லியில் 10,000பேர் பௌத்தம் தழுவிய நிகழ்வை முன்னின்று நடத்திய ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திர பால், பாஜக எதிர்ப்பையடுத்து தனது பதவியை உதறினார். அவரைச் சந்தித்துப் பாராட்டினோம். இன்று அவரது இல்லத்திலிருந்து அம்பேத்கர் நினைவிடம் வரை நடைபெற்ற சாதி ஒழிப்பு பேரணியில் பங்கேற்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications