Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூரில் தலைக்குனிவு.. பிரதமர் மோடி மீது நம்பிக்கை இல்லை! தமிழில் அதிர வைத்த திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.

மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இனத்தை சேர்ந்த மக்களிடைய வன்முறை நிகழ்ந்துள்ளது. இந்த வன்முறையால் இதுவரை மணிப்பூரில் 150 பேர் பலியாகிவிட்டனர். 5000 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஏராளமானோர் தங்குவதற்கு வீடின்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Thirumavalavan spoke in Tamil on no confidence motion against Centre

இந்த நிலையில் மே மாதம் முதல் நடக்கும் இந்த வன்முறை சம்பவம் குறித்து பிரதமர் எதையும் பேசவில்லை, மணிப்பூர் சென்று கள நிலவரத்தை பார்வையிடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சரியாக 80 நாட்களுக்கு பிறகு மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற வாசலில் வெறும் 30 வினாடிகள் மட்டுமே பேசியிருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

இதன் மீது இன்றைய தினம் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த விவாதத்தின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழில் தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது அவர் கூறுகையில் குக்கி, மைத்தேயி இருதரப்பும் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளனர். பிரதமர் மோடி கண்டிக்கவில்லை. முதல்வர் வந்து பார்க்கவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். மணிப்பூர் மாநில மக்களும் எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளன.

கார்கில் போர் ராணுவ வீரரின் மனைவி மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார். இது நாட்டுக்கு தலைகுனிவு. அரசுக்கான ஆயுதங்கள் மணிப்பூரில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மைத்தேயி மக்களே அரசின் ஆயுதங்களை கொள்ளையடித்துள்ளனர். மணிப்பூர் மாநில ஆளுநரிடம் இதனை எடுத்து சொன்னோம். மணிப்பூரிலும் மட்டுமல்ல ஹரியானாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறியாட்டம் தொடருகிறது.

இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக உறுதி மொழி எடுக்கிறோம்; அழித்தொழிப்போம் என பேசுகின்றனர். ஜெய்ப்பூரிலும் ரயில்வே காவலர் ஒருவர் இஸ்லாமியர்களை தேடி தேடி சென்று சுட்டுக் கொன்றுள்ளார். மோடிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கோஷமிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கு தலித்துகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்கள் அச்சத்தில் வீழ்ந்துகிடக்கின்றன.

12 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட்டுகளுக்காக தள்ளுபடி செய்துள்ளது மத்திய அரசு. தக்காளி கிலோ ரூ200, ரூ300க்கு விற்பனையாகிறது. பெரும்பான்மை இந்து மக்களுக்கும் எதிரானதாக மோடி அரசு இருக்கிறது. இந்து சமூகத்தை சார்ந்த மக்கள்தான் கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸை ஆட்சியில் அமர்த்திருக்கின்றனர்.

மோடி அமைச்சரவை மீது என் நம்பிக்கை இன்மையை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்; எஸ்சி எஸ்டி கல்வி உதவித் தொகை- ஸ்காலர்ஷிப் மறுக்கப்பட்டுள்ளது; மோடி பதவி விலக வேண்டும். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கிறேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் பேசினார். முன்னதாக இந்த விவகாரம் மீது திமுக எம்பி டி.ஆர். பாலு பேசியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+