"நீதிபதியே மதக் கலவரத்திற்கு வித்திடுகிறார்” நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய எம்.பி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சனையில் ஒரு நீதிபதி கலவரத்திற்கு வித்திடுகிறார் என்றும், அவர் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் திண்டுக்கல் தொகுதி எம்.பி ஆர்.சச்சிதானந்தம் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் நேற்று முன்தினம் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

thirupparankundram dmk high court

இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சிஐஎஸ்எப் வீரர்கள் உதவியுடன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் பகுதியில் நேற்று 144 தடை விதிக்கப்பட்டிருந்ததால் மனுதாரர் மலையேறுவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று (டிசம்பர் 4) தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்து, மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் நேற்றே தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து நேற்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது செல்ல பாஜகவினர் முயன்றனர். ஆனால், நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்ல உள்ளதாக தெரிவித்து திட்டவட்டமாக அனுமதி மறுத்தது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், மக்களவையில் சுகாதாரப் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்புக்கான வரி விதிப்பு மசோதா மீதான விவாதத்தில் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் பேசுகையில், "மதுரை மாவட்டத்தில் நீதிபதி ஒருவர் கலவரத்திற்கு வித்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றத்தின் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையை தனது ஒருதலைப்பட்சமான தீர்ப்பை அமலாக்கம் செய்வதற்காக அவர் பயன்படுத்தி உள்ளார்.

இது மாநில காவல்துறைக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் அபாயகரமான நடவடிக்கை. தமது தீர்ப்பை அமலாக்குவதற்கான காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை வழங்க முயற்சிக்கிறார். இந்த நீதிபதியின் நடவடிக்கையால் மதக் கலவரம் உருவாகும். அவர் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+