ஓரின திருமணத்துக்காக நாங்கள் சட்டம் இயற்ற முடியாது.. உச்சநீதிமன்றம் கூறிய முக்கிய 10 பாயிண்டுகள்
டெல்லி: இந்தியாவில் ஓரின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வேளையில் இந்த நீதிமன்றம் ஓரின திருமணத்துக்காக நீதிமன்றம் சட்டம் இயற்ற முடியாது என்பது உள்பட 10 முக்கிய பாயிண்டுகளை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. அதன் விபரம் வருமாறு:
இந்தியாவில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. மாறாக ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை.

இத்தகைய தன்பாலின ஈர்ப்பாளர்கள் அல்லது ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு இந்தியாவில் அனுமதி கூடாது. இது இந்திய காலசாரத்துக்கு எதிரானது என பல்வேறு மதம்சார்ந்த அமைப்புகளும், மத்திய அரசும் கூறி வருகிறது.
இந்நிலையில் தான் ஓரின திருமணத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். இதற்கு சிறப்பு சட்டத்திருத்தத்தின் கீழ் அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஓரின சேர்க்கையாளர்கள், எல்ஜிபிடிகு ஆர்வலர்கள் தரப்பில் உச்சநீதிமன்றங்களில் மனுக்கள் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அதில் ஓரின திருமணம் குறித்த நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் தான் ஓரின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய 10 முக்கிய பாயிண்டுகள் வருமாறு:
முதல் பாயிண்ட்: தன்பால் ஈர்ப்பு என்பது சாதி வர்க்கம் பார்த்து வருவது இல்லை. மேலும் இது நகர்புறத்துக்கானது எனவும், வசதி படைத்தவர்களுக்கானது என்ற கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் தன்பால் ஈர்ப்பு எனும் வினோத நடவடிக்கை என்பது நகர்ப்புறத்தில் இருப்பவர்களும், வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருப்பது என கருதுவதை ஏற்க முடியாது.
2வது பாயிண்ட்: மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் உரிமை நீதிமன்றத்துக்கும், நீதிபதிகளுக்கும் உள்ளது. இருப்பினும் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் என்பது நீதிமன்றத்துக்கு இல்லை. குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தங்கள் செய்யவும் முடியாது. இது அனைத்தும் நாடாளுமன்றம் சார்ந்த விஷயமாகும். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, சட்டத்திருத்தம் செய்தால் அதனை நிலைநிறுத்தும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளது.
3வது பாயிண்ட்: சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமா? என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்குள் நுழையாமல் நீதிமன்றம் கவனமாக இருக்க வேண்டும்.
4வது பாயிண்ட்: திருமண சீர்திருத்தங்கள் என்பது சட்ட திருத்தங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்
நீதிமன்றம் திருமணம் என்பதை ஒரு நிலையான அல்லது மாறாத ஒரு சடங்கு என்று கூறுவது தவறானது என தெரிவித்தது.
5வது பாயிண்ட்: ஒவ்வொருவரின் மீதான அன்பும், உறவும் தான் நம்மை மனிதர்களாக உணர வைக்கிறது. இதற்கு உள்ளார்ந்த ஆத்மார்த்தமான தேவை ஒன்று உள்ளது. நமது உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும், வெளிக்காட்டிக்கொள்வதும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் இதில் பல வடிவங்கள் உள்ளன. பிறந்த குடும்பம், காதல் வடிவங்கள் என பல பரிணாமங்கள் இருக்கின்றன.
6வது பாயிண்ட்: குடும்பமாக வாழ்வதும், சமூகத்தில் குடும்பங்கள் உருவாகுவது மனித பண்பின் மிகவும் முக்கியமான பகுதியாகும். இது தான் சுயமான வளர்ச்சிக்கும் உதவவும் செய்கிறது.
7 வது பாயிண்ட்: ஒவ்வொருவரும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது அவர்களின் சுயவிருப்பமாகும். பலர் இதனை தங்களது வாழ்வின் மிக முக்கியமான முடிவாக கருதலாம். இந்த உரிமை என்பது 21வது பிரிவின் கீழ் வாழும் உரிமை மற்றும் சுதந்திர வாழ்க்கை உரிமைக்கு உட்பட்டதாக உள்ளது.

8 வது பாயிண்ட்: தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் தங்களின் வாழ்க்கை துணையை தார்மீக உரிமையின் அடிப்படையில் தேர்வு செய்ய உரிமை உண்டு. ஏனென்றால் சுதந்திரம் என்பதன் பொருள் என்பது ஒருவர் தங்களின் விருப்பத்தின் படி செயல்படுவதை உறுதி செய்வதாகும்.
9வது பாயிண்ட்: தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தன்பாலின ஜோடிகளுக்கான விருப்ப வாழ்வை வாழ அனுமதிக்க மறுப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
10வது பாயிண்ட்: பாலினத்தின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடாது என்பது தான் சமத்துவம். தன் பாலின இணையர்களால் குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாது என கூறுவதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. குழந்தை திருமணங்கள் முன்பு ஏற்கப்பட்டன. இப்போது அது ஏற்கப்படவில்லை. குழந்தை திருமணம் என்பது சட்ட விரோதமானது. இதனால் திருமணம் என்பது ஒவ்வொரு காலத்திலும் மாறக்கூடியது. இருப்பினும் சிறப்பு திருமண சட்டத்தை ஏற்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications