இந்த தேர்தல் பிரச்சாரம் எப்படி இருந்தது தெரியுமா.. பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்பீடு இதுதான்
டெல்லி: இந்த தேர்தல் பிரச்சாரம் ஒரு புனித பயணத்தை போன்று இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் அமைச்சரவை சகாக்களுடன் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். அப்போது கடந்த 5 ஆண்டுகளாக இந்த அரசை வெற்றிக்கரமாக வழிநடத்தியதற்காக நன்றி கூறினார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்தியில் பேசினார்.

பயணம்
அவர் கூறுகையில் இதுவரை எத்தனையோ தேர்தல்களில் நான் கலந்து கொண்டுள்ளேன். ஏராளமான தேர்தல் பிரச்சாரங்களிலும் நான் ஈடுபட்டுள்ளேன். ஆனால் இந்த தேர்தல் பிரச்சாரம் எனக்கு புனித பயணத்தை போன்றதாகும்.

ஏராளம்
இந்த தேர்தலில் அரசியலை தாண்டி ஏராளமான விஷயங்கள் இருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் எதிர்க்கட்சியினருக்கு எதிராக மக்களே போராடியதாகவும் தேர்தல் பயணம், புனித யாத்திரை போன்று இருந்ததாகவும் பிரதமர் கூறினார்.

தகவல்
இந்த கூட்டத்துக்கு முன்னதாக அவர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் பிரதமர் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மக்கள் நலன்
இது போல் கேதார்நாத்- பத்ரிநாத் புனித பயணம் மேற்கொண்டிருந்த அவர் இந்த பயணமே மக்களின் நலனுக்காகத்தான் என்று தெரிவித்திருந்தார். எத்தனை வெளிநாடுகளுக்கு சென்றாலும் இது போன்ற இடங்களுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications