பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம்? 7 கட்ட லோக்சபா தேர்தலை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? பின்னணி
டெல்லி: இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று கூறி, தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியாவின் லோக்சபா தேர்தல் குறித்த தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்,

“நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார்.
இதில், முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்டமாக 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. முன்று கட்டங்களாக 12 மாநிலங்கள் 94 தொகுதிகளிலும், நான்கு கட்டமாக 10 மாநிலங்கள் 96 தொகுதிகளிலும், ஐந்து கட்டமாக 8 மாநிலங்கள் 49 தொகுதிகளிலும்,ஆறு கட்டமாக 7 மாநிலங்கள் 57 தொகுதிகளிலும், ஏழு கட்டமாக 8 மாநிலங்கள் 57 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு தயார் என அறிவித்துள்ள நிலையில், பல கட்டமாக தேர்தல்கள் நடத்தப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியான விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படாமல், 7 கட்டங்களாக நடத்துவதன் மூலம் பிரதமர் மோடி மற்றும் ஆளும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தேர்தல் ஆணையம் வழிவகுத்து கொடுக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
அதேபோல பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் போது விதி மீறல்கள் அதிகம் நடக்கிறது என்றும் கூறியுள்ளனர். உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது எனில், தேர்தல் நாளுக்கு ஒரு நாளைக்கு முன்னர் அனைத்து வகையான பிரசாரங்களும் நிறுத்தப்படும். ஆனால், பல கட்டங்களாக பிரித்து தேர்தல் நடத்தப்படும் மாநிலங்களில் பிரதமர் மோடி பரப்புரையை மேற்கொண்டிருப்பார்.
இது டிவி, சோஷியல் மீடியா, நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக தமிழ்நாட்டு மக்களை எட்டும். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல்தானே? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேர்தல் முறைகேட்டை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி.. பட்டுவாடாவை தடுக்க 8 "முக்கிய" உத்தரவு
ஆனால், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீஸ், துணை ராணுவ வீரர்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதால், ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்போது பாதுகாப்புக்காக வீரர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து வருகிறது. இந்த விளக்கத்தின் மீதும் சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அதாவது, “பாதுகாப்பு துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதாக நாங்கள் சொல்லும்போது, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை என்று சொன்ன மத்திய அரசு இன்று, துணை ராணுவம், போலீஸ் பற்றாக்குறை குறித்து வெளிப்படையாக பேசுகிறது. ஆள் பற்றாக்குறை இருக்கிறது எனில், தேவையானவர்களை எடுத்து அவர்களை கொண்டு ஒரே கட்டமாகவோ, அல்லது இரண்டு கட்டமாகவோ தேர்தலை நடத்த வேண்டியதுதானே?” என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இவ்வளவு கோடியா? குஜராத் சட்டசபை தேர்தலில் தான் அதிக பணம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்
மேலும், “பல கட்டங்களாக தேர்தல்களை நடத்தும் நடைமுறை என்பது தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறும் செயலாகும். மட்டுமல்லாது முழுக்க முழுக்க ஆளும் கட்சிக்கு ஆதரவான செயல்பாடு” என்று விமர்சித்துள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications