டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த ஒரு சோஷியல் மீடியா அக்கவுண்டும் கிடையாது.. மோடி அதிரடி ட்வீட்.. திடீர் பரபரப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக், ட்விட்டர் போன்ற அனைத்து சமூக வலைத் தளங்களில் இருந்தும் வெளியேற திட்டமிட்டுள்ளதாக பொருள்படும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி டுவிட் செய்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் முன்பாகவே சமூகவலைத்தளங்களில் அவர் வெகு பிரபலம். டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்திதான் நாடு முழுக்க மக்கள் ஆதரவை பாஜக ஒன்று திரட்ட முடிந்தது என்றும் கூறுவார்கள்.

இப்போதும்கூட பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் அதிக ஃபாலோவர்களை கொண்ட உலகத் தலைவர்களில் முன்னணியில் இருக்கக்கூடிய ஒருவர். அவரது ட்விட்டர் கணக்கை 53.3 மில்லியன் ஃபாலோவர்கள் பின்தொடர்கிறார்கள்.

மோடி ட்வீட்

உலகத்திலேயே ட்விட்டரில் இவ்வளவு அதிக ஃபாலோவர்கள் வைத்துள்ள பிரபலம் மோடிதான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று இரவு 9 மணியளவில் அதிரடியாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி. அதில், இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளை விட்டுவிடலாம் என்று யோசிக்கிறேன். உங்கள் அனைவரையும் போஸ்ட் செய்ய வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

அதாவது நான் போஸ்ட் செய்ய மாட்டேன், உங்களை போஸ்ட் செய்ய வைப்பேன் என அதிரடியாக கூறியுள்ளார். இத்தனை அதிகமான பாலோவர்களை கொண்ட மோடி எதற்காக இந்த அக்கவுண்ட்களை கைவிட வேண்டும்? கைவிடுவதற்கு முடிவு செய்து விட்டாரா அல்லது யோசித்து வருகிறாரா? அல்லது ஞாயிற்றுக்கிழமை மட்டும் பயன்படுத்த மாட்டாரா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

செய்தியாளர் சந்திப்பா

செய்தியாளர் சந்திப்பா

சமூக வலைத்தளங்கள் மூலமாக மோடி கருத்து கூறுவதை விட்டுவிட்டு செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. ஒருவேளை இனிமேல் மாதாமாதம் செய்தியாளர்களை சந்திப்பது என்ற முடிவுக்கு மோடி வந்து விட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் இனிமேல்தான் விளக்க வேண்டியுள்ளது.

விளக்கம் தேவை

விளக்கம் தேவை

இதனிடையே மோடி கருத்து தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஆங்கில ஊடங்களில் பிரேக்கிங் செய்திகளாகவும் மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இதுதொடர்பாகவே பேசப்பட்டு வருகிறது. மோடியின் இந்த ட்வீட்டுக்கான காரணம் என்ன என்பதை பிரதமர் அலுவலகம் விளக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
This Sunday, thinking of giving up my social media accounts on Facebook, Twitter, Instagram & YouTube. Will keep you all posted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X