சரித்திரம்!பழைய நாடாளுமன்ற லோக்சபாவில் கடைசியாக ஒலித்த குரல் தொல்.திருமாவளவனின் கம்பீர தமிழ் பேச்சு!
டெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில் கடைசியாக ஒலித்த குரல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் தமிழ் முழக்கம்.
பழைய நாடாளுமன்ற லோக்சபா கட்டிடத்தின் கடைசி கூட்டத்தில் 'அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி திருமாவளவன் பேசியதாவது:

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்ற வாய்ப்பை வழங்கியமைக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். அம்பேத்கர், நேரு, பேரறிஞர் அண்ணா போன்ற மாபெரும் தலைவர்கள் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் அமர்ந்து விவாதித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கட்டிடம் இன்றோடு கடைசி நாளாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அம்பேத்கர், நேரு, அண்ணா: புதிய கட்டிடத்தில் நாம் இந்த சபையை மாற்ற இருக்கிறோம். புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்கிற கனவுகளோடு நம்முடைய முன்னோர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அரசமைப்புச் சட்டத்தை இயற்றினார்கள். அந்த அரசமைப்புச் சட்டம் ஜனநாயகத்தின் உயிர் மூச்சு. ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதாகும். அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் இந்த சபை இயங்கிக் கொண்டிருக்கிறது.
நல்ல சட்டங்கள்: இந்த சபை மூலம் இந்த தேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சபையில் விளிம்பு நிலை மக்களின் நலனுக்காக எத்தனையோ பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டுச் சட்டம், நகர்பாலிகா பஞ்சாயத்து ராஜ் போன்ற ஜனநாயகத்தை ஊராட்சி வரையிலும் விரிவுபடுத்தக் கூடிய புரட்சிகரமான சட்டங்கள். வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் என எண்ணற்ற விளிம்பு நிலை மக்களைப் பாதுகாக்கக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட்டன.
பயங்கரவாத சட்டங்கள்: பொடா, தடா போன்ற பயங்கரவாத சட்டங்களும் இந்த சபையில் இயற்றப்பட்டுள்ளன. விளிம்பு நிலை மக்களின் குரலை பிரதிபலிக்கும் சபை என்பதால்தான் நானும் இந்த சபையில் 2-வது முறையாக உறுப்பினராகக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளேன். இந்த நிலையில் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது இந்த நாடாளுமன்றத்தின் முக்கியமான கடமையாகும். ஆகவே அரசமைப்புச் சட்டத்தின் செக்குலரிசம் என்பது மிக முக்கியமானது. அந்த மதச்சார்பின்மையை காப்பாற்றப்பட வேண்டும். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications