45 வயதை கடந்த... அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.. கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்
டெல்லி: 45 வயதைக் கடந்த அனைவரும் தற்போது கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள கோவின் செயலியில் பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாறிய கொரோனாவும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாததும் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், 45 வயதைக் கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொள்ள கோவின் செயலியில் 45 வயதைக் கடந்தவர்கள் தற்போது பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தடுப்பூசி மையங்களில் பதிவு செய்யும் முறை ஏப்ரல் 1ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5.8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 6.11 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications