பாகிஸ்தானுடன் பதற்றம்.. இந்திய முப்படை தளபதிகளுக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Z-plus security for Commanders | பாகிஸ்தானுடன் பதற்றம், முப்படை தளபதிகளுக்கும் பாதுகாப்பு

    டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதட்டத்தை தொடர்ந்து இந்திய விமானப்படை தளபதி மற்றும் கடற்படைத் தளபதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.

    Threat of terrorists : Z plus security for Chiefs Of Air Force and Naval

    இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. எல்லை தாண்டி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் நுழைய முயன்றன. ஆனால், இந்திய விமானப்படையினர் அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தனர்.

    தற்போது, விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கபட்ட பிறகும், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பி.எஸ். டானோயா மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா ஆகியோருக்கு பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆயினும், விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு அந்தந்த படைகளின் கமாண்டோக்களால் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு அமைப்புகளால் புற பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்-க்கு ஏற்கனவே இசட்- பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+