டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.. அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை- மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மூன்று வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பரிசோதனை கட்டத்தில் இருப்பதாகவும், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான வழி வகை செய்யப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

Recommended Video

    Covaxin முதல் சோதனை வெற்றி.. இரண்டாம் கட்ட சோதனைக்கு தயார் | OneindiaTamil

    நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

    கொரோனா தடுப்பூசி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பாகவும் தனது உரையில் அவர் குறிப்பிடத் தவறவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி தொடர்பாக கூறிய கருத்துக்கள் இதோ:

    பன்முகத் தன்மை இந்தியாவின் பலம்.. நமது ஒற்றுமை உலகிற்கு பாடம்.. சுதந்திர தின உரையில் மோடி புகழாரம் பன்முகத் தன்மை இந்தியாவின் பலம்.. நமது ஒற்றுமை உலகிற்கு பாடம்.. சுதந்திர தின உரையில் மோடி புகழாரம்

    தற்சார்பு

    தற்சார்பு

    சில மாதங்களுக்கு முன்பு வரை வெண்டிலேட்டர், முகக் கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றுக்காக நாம் பிற நாடுகளை சார்ந்து இருந்தோம். ஆனால் இப்போது நாம் அவற்றை போதிய அளவு உற்பத்தி செய்வதோடு, பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து உள்ளோம்.

    3 தடுப்பூசிகள்

    3 தடுப்பூசிகள்

    இந்தியாவில் தற்போது 3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவை வெவ்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இன்று முதல் நமது நாடு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனை நோக்கி செல்ல உள்ளது. இந்தியாவின் சுகாதாரத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகும் இந்த தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷனை நான் இன்று துவக்கி வைக்கிறேன். தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியர்களும் சுகாதார அடையாள அட்டைகளை பெறுவார்கள்.

    விரைவில் வினியோகம்

    விரைவில் வினியோகம்

    நமது நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் மூன்று தடுப்பூசிகளும் பரிசோதனை முடிந்து விஞ்ஞானிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், அனைத்து மக்களுக்கும் விநியோகம் செய்யப்படும். போதிய அளவுக்கு அதிகமாக மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு ஒவ்வொரு இந்தியனையும் அது சென்று சேர்வது உறுதி செய்யப்படும். எவ்வளவு வேகமாக மக்களிடம் இந்த மருந்துகளை கொண்டு சென்று சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக கொண்டுசென்று சேர்ப்போம்

    பொருளாதாரம்

    பொருளாதாரம்

    கொரானா வைரஸ் பாதிப்பிலிருந்து நமது நாட்டின் பொருளாதாரத்தை எவ்வளவு சீக்கிரம் மீட்டெடுக்க முடியுமோ அவ்வளவு விரைவில் மீட்டெடுப்பது அரசின் குறிக்கோள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது தெரிவித்தார்.

    English summary
    Today three vaccines are in testing stages in India. As soon as the scientists give a green signal, the country will begin their large scale production: PM Narendra Modi at the Red Fort on IndependenceDay.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X