ஒரே இடத்தில் அசெம்பிள் ஆன முதல்வர் வேட்பாளர்கள்.. தேர்தல் ரிசல்ட் நாளில் பெரும் எதிர்பார்ப்பு!
சென்னை: நாளை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் ஆகிய முதலமைச்சர் வேட்பாளர்கள் நால்வருமே தலைநகரில் உள்ளனர். நால்வரும் தமிழகத்தின் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், வாக்குபதிவன்று நால்வருமே ஒரே இடத்தில் இருக்கின்றனர்.
தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், கொடைக்கானல் சென்றிருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது சென்னையில் உள்ளார். அவர் இன்று இரவு கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். சேலத்தில் இருந்துவந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பி உள்ளார்.

தவெக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தனது வீடு இருக்கும் நீலாங்கரை மற்றும் பனையூருக்கு விசிட் அடித்தவாறேஉள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முறை காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளில் அவர் சென்னை வீட்டில் இருக்கிறார்.
முக ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 86.12% வாக்குகள் பதிவாகியுள்ளது.
மு.க. ஸ்டாலின்- திமுக
சந்தானகிருஷ்ணன்- அதிமுக
வி.எஸ்.பாபு- தவெக
சவுந்தரபாண்டியன்- நாம் தமிழர் கட்சி
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 92.08% வாக்குகள் பதிவாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி - அதிமுக
காசி - திமுக
பிரேம்குமார் (தவெக ஆதரவு சுயேட்சை வேட்பாளர்)
பிரியதர்ஷினி - நாம் தமிழர் கட்சி
விஜய்
தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.74% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சி. ஜோசப் விஜய் - தவெக
ஆர்.டி.சேகர் - திமுக
திலகபாமா - பாமக
வெற்றித்தமிழன் - நாம் தமிழர்
தவெக தலைவர் விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் 81.77% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சி. ஜோசப் விஜய் - தவெக
இனிகோ இருதயராஜ் - திமுக
ராஜசேகரன் - அதிமுக
கிருஷ்ணசாமி - நாம் தமிழர் கட்சி
சீமான்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 74.20% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சீமான் - நாம் தமிழர் கட்சி
மாங்குடி - காங்கிரஸ்
தேர்போகி பாண்டி - அமமுக
பிரபு - தவெக
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications