"மீண்டும் அதிமுக ஆட்சி".. தவெகவிற்கு 38 - 47.. திமுகவிற்கு ஷாக் தந்த புதிய எக்ஸிட் போல் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், ஆளும் கட்சியான திமுக கூட்டணி பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் புதிய எக்ஸிட் போல் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 38 முதல் 47 தொகுதிகள் வரை வெல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இதற்கிடையே தான் கடந்த 29ம் தேதி முதல் எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

aiadmk-alliance-will-win-99-120-seats-dmk-ally-gets-only-76-83-and-tvk-38-47-says-bar-data-votei

அந்த வகையில் Bar Data -VoteIndia என்ற நிறுவனம் தமிழகத்தில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணிக்கு வெற்றி

அதன்படி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி மொத்தம் 99 முதல் 120 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 33.7 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. கூட்டணியில் தலைமை வகிக்கும் அதிமுக 92-97, பாஜக 2-4, பாட்டாளி மக்கள் கட்சி 5-7, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5-7 வெல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதவிர தமிழ்மாநில காங்கிரஸ் 0-1, ஐஜேகே 0-2, தமிழக மக்கள் ன்னேற்ற கட்சி 0-1, தென்னிந்திய பார்வர்ட்பிளாக் 0-1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி 0-1, சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் 0-1, புரட்சி பாரதம் கட்சி 0-1, புதிய நீதி கட்சி 0-1 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கு எவ்வளவு?

திமுக தலைமையிலான கூட்டணி 76 முதல் - 83 தொகுதிகளில் வெல்ல சான்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 31.4 சதவீத வாக்குகள் கிடைக்கலாம். கூட்டணியில் திமுக 57 - 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4-5 தொகுதிகளிலும், தேமுதிக 2 - 3 தொகுதகிளிலும், விசிக 1-2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1-2 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் 1-2 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கூட்டணியில் உள்ள ஐயூஎம்எல் 1-2 தொகுதிகளிலும், மதிமுக 2-3 தொகுதகிளிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் 0-1 மனிதநேய மக்கள் கட்சி 0-2, மனிதநேய ஜனநாயக கட்சி 0-1, முக்குலத்தோர் புலிப்படை 0-1, எஸ்டிபிஐ 0-1, கேகே செல்வக்குமாரின் தமிழர் தேசிய கட்சி 0-1 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தவெக - நாம் தமிழர்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 38 முதல் 47 தொகுதிகளில் வாகை சூடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மொத்தம் 25.9 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி 5.3 சதவீத ஓட்டுகளுடன் 0-3 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2.6 சதவீத ஓட்டுகளுடன் 0-2 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+