லோக்சபாவில் தமிழ் வாழ்க போலவே பாஜகவை அதிரவைத்த திரிணாமுல்-ன் 'ஜெய் காளி! ஜெய் வங்களா'
டெல்லி: லோக்சபாவில் தமிழ் வாழ்க என முழக்கமிட்டு பாஜகவை அதிரவைத்தனர் தமிழக எம்.பிக்கள். அதேபோல பாஜகவினரின் ஜெய் ஶ்ரீராம் கோஷத்துக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸின் எம்.பிக்கள் ஜெய் காளி! ஜெய் வங்களா என முழங்கினர்.
17-வது லோக்சபாவின் தொடக்க நாட்களே பெரும் களேபரமாக களை கட்டியிருக்கிறது. பெரும்பான்மை பெற்ற பாஜக எம்.பிக்கள், பிற கட்சி எம்.பிக்கள் பதவி ஏற்கும் போது வெறுப்பேற்றுவதாக நினைத்துக் கொண்டு ஜெய் ஶ்ரீராம், வந்தே மாதாரம், பாரத் மாதா கீ ஜே என முழக்கங்களை எழுப்பினர்.

இந்த முழக்கங்களுக்கு மாநில கட்சிகளின் எம்.பிக்களும் சரியான பதிலடியை கொடுத்து பாஜகவை அதிர வைக்கின்றனர். திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க, திராவிடம் வெல்க என முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோல் 2-வது நாள் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள், சிறுபான்மை சமூக எம்.பிக்கள் வரிசையாக பாஜகவுக்கு பதில் கொடுத்தனர். ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி உருது மொழியில் பதவியேற்றார். அப்போது பாஜக எம்.பிக்கள் கூச்சலிட அதற்கு பதிலடியாக, ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹ் அக்பர், ஜெய் ஹிந்த் என முழக்கம் எழுப்பினார்.
சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. சஃபீயுர் ரஹ்மான் பார்க் பதவியேற்க வரும் போது வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே என பாஜகவினர் முழங்கினர். அத்துடன் பார்க், வந்தே மாதரம் என முழக்கமிடவும் பாஜக எம்.பிக்கள் உத்தரவிட்டனர். ஆனால் பதவியேற்ற பார்க், அரசியல்சாசனமைப்பு சாசனம் வாழ்க என முழக்கமிட்டதுடன் வந்தே மாதரம் என்பது இஸ்லாம் சார்ந்தது அல்ல என கூறிவிட்டு நகர்ந்தார்.
மற்றொரு சமாஜ்வாதி எம்.பி எஸ்.டி. ஹாசன் பதவி ஏற்க வரும்போது இந்துஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எதிரொலித்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் பதவி ஏற்க வந்த போது பாஜகவின் முழக்கங்கள் உச்சகட்டத்தை எட்டின.
திரிணாமுல் எம்.பி ககோலி கோஷ் டாஸ்திதார், பதவி ஏற்க வரும் போது ஜெய் ஶ்ரீராம் முழக்கங்களை எழுப்பினர். இதற்கு பதிலடியாக ஜெய் காளி! ஜெய் வங்களா! என உரத்த குரலில் தொடர்ந்து முழங்கியபடியே வந்து பதவி ஏற்றார். மற்றொரு திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி பதவி ஏற்ற பின்னர் சமஸ்கிருதத்தில் ஜெய் காளி என முழக்கம் எழுப்பினார். ஆனால் பாஜக எம்.பிக்களுக்கு அது என்ன என்று தெரியாமல் குழம்ம்பிப் போயினர்.
மேலும் கலீலுர் ரகுமான், அபு தாஹீர் கான் ஆகியோர் அல்லாவின் பெயரால் உறுதி மொழி ஏற்றனர்..
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications