நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்- திரிணாமுல் காங். மஹூவா மொய்த்ரா எம்.பி. பதவி அதிரடி பறிப்பு!
டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மஹூவா மொய்த்ராவை எம்பி பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் லோக்சபாவில் இன்று அதிரடியாக நிறைவேறியது. இதனையடுத்து மஹூவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என்பது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பாஜகவின் எம்.பி. வினோத் குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு அல்லது நன்னடத்தை குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில் கடந்த மாதம் அறிக்கையை நன்னடத்தைக் குழு வெளியிட்டிருந்தது.
மஹூவா மொய்த்ரா மீதான புகார் குறித்த விசாரணை அறிக்கையில் அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. நன்னடத்தை குழுவில் இதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது. மஹூவா மொய்த்ராவுக்கு எதிராக காங்கிரஸ் வாக்களித்தது.
இந்த நிலையில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் பரிந்துரையை இன்று கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் நன்னடத்தை குழு தலைவரான பாஜகவின் வினோத் குமார் சோன்கர் தாக்கல் செய்தார். அப்போது இப்பரிந்துரை அறிக்கை மீது விரிவான விவாதம் நடத்த பகுஜன் சமாஜ் கட்சி எம்பி டேனிஷ் அலி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதேபோல லோக்சபாவில் எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் பலரும் மஹூவா மொய்த்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் லோக்சபாவில் கடும் அமளி நீடித்தது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
அப்போது சபையில் இருந்து வெளியே வந்த மஹூவா மொய்த்ரா, பரிந்துரை அறிக்கை இன்னமும் வரவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பின் லோக்சபாவுக்கு மீண்டும் வருவேன். என்ன நடக்கிறது என்பதை பகல் 2 மணிக்கு பின்னர் பார்க்கலாம் என்றார்.
முன்னதாக தமக்கு எதிரான பரிந்துரை அறிக்கை தாக்கல் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மஹூவா மொய்த்ரா, நீங்கள் மகாபாராதப் போரை பார்க்கப் போகிறீர்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் ஒரு மனிதன் அழியும் போது மனசாட்சிதான் மரணிக்கிறது என்கிற கவிதை வரிகளையும் மஹூவா மொய்த்ரா மேற்கோள்காட்டினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியது. அப்போது மஹூவா மொய்த்ராவுக்கு எதிரான அறிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் முடிவில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா கொண்டு வந்தார். எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மஹூவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்கும் தீர்மானம் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டு மஹூவா மொய்த்ராவுக்கு ஆதரவாகா அணிவகுப்பும் நடத்தினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications