மோடி போட்ட திடீர் உத்தரவு.. ஜெர்க் ஆன நிர்மலா சீதாராமன்-செம்ம ரியாக்சனில் தமிழக பாஜக நிர்வாகிகள்!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தேசிய கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி போட்ட திடீர் கவுன்சிலால் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பெரும் பரபரப்படைந்தனர்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பாஜக நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

தேசிய கவுன்சில் கூட்டம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர். காந்தி உட்பட எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

டெல்லி கூட்டத்தில் நிர்மலா சீதாராமன்: இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். தமிழ்நாட்டில் பிறந்து ஆந்திராவில் திருமணம் முடித்து கர்நாடகாவின் ராஜ்யசபா எம்பியாகி இருப்பவர் நிர்மலா சீதாராமன்.

தமிழ்நாடு சார்ந்த விவகாரங்களுக்கு பாஜகவின் மேலிடப் பிரதிநிதியாக, மத்திய அரசு பிரதிநிதியாக செயல்படுகிறவர் நிர்மலா சீதாராமன். பாஜக கவுன்சில் கூட்டத்திலும் தமிழ்நாட்டு நிலவரம், தமிழ்நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஆங்கிலத்தில் நிர்மலா சீதாராமன் பேசினார்.

மோடி உத்தரவால் ஜெர்க் ஆன நிர்மலா: நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் பேசி முடிக்கும் வரை பிரதமர் மோடி பொறுமையாக இருந்தார். அவர் தமது உரையை முடித்த போது பிரதமர் மோடி குறுக்கிட்டு, நீங்க்தான் தமிழ்நாட்டுக்காரராச்சே.. தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் வந்துள்ளார்கள்.. நீங்கள் அவர்களுக்காக தமிழில் பேசுங்க.. அதுதான் அவங்க எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என திடீரென உத்தரவிட்டார்.

இதனால் ஒருநிமிடம் திகைத்துப் போனாராம் நிர்மலா சீதாராமன். இதன் பின்னர் தாம் ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே விவரமாக தமிழிலும் விளக்கினாராம் நிர்மலா சீதாராமன். இதனால் டெல்லி பாஜக கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டு பாஜக நிர்வாகிகள் செம்ம உற்சாகமாகி கை தட்டி ஆராவாரம் செய்தனராம். இதுதான் இப்போது தமிழ்நாடு பாஜகவில் ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications