Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநருக்கு மிகப்பெரிய ‘செக்’.. திடீரென சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனுவை தாக்கல் செய்த தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி, தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

TN Government filed an additional petition in supreme court against governor ravi

இதற்கிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த மசோதாக்கள் மீண்டும் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு கடந்த நவ.18ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர், காலத்தை வீணடிப்பதற்காகவே இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகிறார் என திமுகவினர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நாளை ஆளுநருக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த கூடுதல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+