ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
டெல்லி:ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக, பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால், உரிமத்தை நீட்டிப்பது தொடர்பான ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பம் ஏப்ரல் 9ம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கடந்த மே 28-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது.
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, நேரடியாக ஆய்வு செய்து பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதிக்க கடந்த 15 ஆம் தேதி உத்தரவிட்டனர். இந் நிலையில், ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாய அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications