டாஸ்மாக் "ஈடி' ரெய்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்! விரைந்து விசாரிக்க கோரிக்கை
டெல்லி: அமலாக்கத்துறை சோதனை குறித்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த நிலையில், இந்த மனுவை விரைந்து விசாரிக்க குறிப்பாக உச்ச நீதிமன்ற கோடைக்கால விடுமுறைக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரிக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி வழக்கு பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்றம் பதிவாளர் தகவல் அளித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுவதாகவும், மதுபான ஆலைகள், டாஸ்மாக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பொய் கணக்கு காட்டி கோடிக் கணக்கில் பணம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையை அடுத்து டாஸ்மாக்கில் ரூபாய் 1000 கொடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்ருள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பெண் அதிகாரிகளையும், ஊழியர்களையும் கேடயமாக பயன்படுத்தி வழக்குகளை அரசு தாக்கல் செய்துள்ளதோ? என எண்ணத் தோன்றுகிறது என்று கூறி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து அமலாக்கத்துறை சோதனை குறித்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில், இந்த மனுவை விரைந்து விசாரிக்க விசாரிக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்ற கோடைக்கால விடுமுறைக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று வரும் 22 ஆம் தேதி வழக்கு பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்றம் பதிவாளர் தகவல் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications