நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
டெல்லி: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கவே முடியாது; மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புதான் முக்கியம் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நியூட்ரினோ திட்டத்துக்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியம் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கி இருந்தது.

இதனிடையே உச்சநீதிமன்றத்தின் இவ்வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வாதங்களின் போது, போடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி உலகப் பல்லுயிர் பெருக்கத்தில் மிக முக்கியத்துவமான இடம். புலிகள் சரணாலயாத்தையும் கம்பம் பள்ளத்தாக்கையும் இணைக்கக் கூடிய பகுதியாக உள்ளது.
சிறிய அளவிலான மனிதர்களின் அதிர்வுகள் கூட புலிகளின் நடமாட்டத்தை தவிர்க்கக் கூடியதாகிவிடும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புதான் முக்கியம். ஆகையால் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவே முடியாது என திட்டவட்டமாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications