மத்திய அமைச்சரவையில் திடீரென தூக்கப்பட்ட ஹர்ஷ்வர்தன்- அமைச்சர் மா.சு.வின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு?
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தன் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் டெல்லி பயணம் ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து போதுமான அளவுக்கு வந்துசேரவில்லை. இதனால் கொரோனா தடுப்பூசிகள் முகாம்கள் பல மூடப்பட்டு வருகின்றன.

மா.சு.வின் டெல்லி பயண திட்டம்
இதனால் உரிய கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக நேரில் சந்தித்து பேச சுகாதாரத்துறை அமைச்சராக ஹர்ஷ்வர்தனிடமும் நேரம் கேட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியனை நாளை 9-ந் தேதி சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தார் ஹர்ஷ்வர்தன்.

தூக்கியடிக்கப்பட்ட ஹர்ஷ்வர்தன்
ஆனால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து டாக்டர் ஹர்ஷ்வர்தன் திடீரென தூக்கியடிக்கப்பட்டார். அவர் நேற்று தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஏற்றுக் கொண்டார். புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுவிக் மண்டாவியா நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திடீரென மாற்றப்பட்டுள்ளது பெரும் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.

டெல்லி பயணம் ஒத்திவைப்பா?
இந்நிலையில் தமது டெல்லி பயணத்தை ஒத்திவைக்கலாமா? என்பது தொடர்பாக கோட்டையில் அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில், ஏற்கனவே 9-ந் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பது தொடர்பாக புதிய அமைச்சர் மன்சுக் மண்டாவியாவிடம் நினைவுபடுத்தலாமா? அல்லது டெல்லி பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாமா? என விவாதிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரிகள் குழு பயணமா?
அப்படி ஒருவேளை தமது டெல்லி பயணம் ஒத்திவைக்கப்பட்டால், சுகாதாரத்துறை அதிகாரிகளை டெல்லி அனுப்பி வைக்கலாம்; இந்த குழு டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோரை சந்தித்து தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி தேவைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கலாம்; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் குறித்தும் பேசலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டதாம்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications