மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என் நேரு அடுத்தடுத்து சந்திப்பு
டெல்லி: மத்திய நிதியமைச்ச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தமிழக அமைச்சர்கள் மத்தியில் சொல்லப்பட்டுள்ளது. எனினும், மத்திய அமைச்சருடடனான தமிழக அமைச்சர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். டெல்லியில் அவர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

நிதியமைச்சருடனான சந்திப்பு குறித்து அமைச்சர் கே என் நேரு தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- டெல்லியில், மாண்புமிகு ஒன்றிய நிதித்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று நேரில் சந்தித்து, ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ஜல் ஜீவன் இயக்கத்திற்கு (Jal Jeevan Mission) ஒதுக்கீடு செய்த நிதியில் கடந்த ஆண்டு வரை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, இந்த நிதி ஆண்டிற்கு வழங்க வேண்டிய தொகை மற்றும் இத்திட்டத்தினை 2028 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்வது தொடர்பாக விவாதித்தேன்.
இச்சந்திப்பின் போது தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி திரு ஏ.கே.எஸ் விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி. கனிமொழி, திரு. திருச்சி என். சிவா, திரு.டி.எம். செல்வகணபதி, திரு. அருண் நேரு, திரு.டி. மலையரசன், திரு.எ. மணி, திரு. கணபதி ப. ராஜ்குமார், திரு. கே. ஈஸ்வரசாமி, நகராட்சி நிர்வாக துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இ. ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வ. தட்சிணாமூர்த்தி, இ. ஆ. ப., ஆகியோர் உடனிருந்தனர். என்று பதிவிட்டுள்ளார்.
இதேப்போல நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று 'எக்ஸ்' தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அவருடன் தமிழ்நாடு வணிகவரித்துறை முதன்மைச் செயலாளர் பிஜேந்திர நவநீத், நிதித்துறை துணைச் செயலாளர் பிரத்தீக் தயாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிதியமைச்சருடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து சந்தித்து இருப்பது கவனம் பெற்றுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை விரைவில் ஒதுக்குவது உள்ளிட்ட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த சந்திப்பின்போது முன்வைக்கப்பட்ட்டு இருக்கலாம் என்று சொல்லப்ப்படுகிறது.
மத்திய நிதியமைச்ச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் தங்கம் தென்னரசு சந்தித்து பேசினர். ஜல் ஜீவன் திட்ட நிதி தொடர்பாக நிர்மலா சீதாராமனை சந்தித்தாக அமைச்சர் கே என் நேரு தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். எனினும், பரபரப்பான அரசியல் சூழலில் நிர்மலா சீதாராமனுடனான தமிழக அமைச்சர்கள் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications