"நல்லா வேலை செய்றாரு.." ஊழியரை வேலையை விட்டு தூக்கிய பிரபல நிறுவனம்.. பின்னணியில் ஷாக் காரணம்
டெல்லி: பிரபல நிறுவனம் ஒன்று அங்கே பணிபுரியும் பெஸ்ட் ஊழியர்களில் ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளது. அதற்கான காரணம் தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எந்தவொரு நிறுவனத்தை நாம் எடுத்துக் கொண்டாலும் அதன் ஊழியர்கள் தான் மிகவும் மதிப்புமிக்க சொத்தாகும். நல்ல ஊழியர்களை உருவாக்கிவிட்டால், அவர்களே நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.
இதனால் ஒரு எந்தவொரு நிறுவனத்திலும் ஒரு பாசிட்டிவ் சூழல் ரொம்பவே அவசியமாகிறது. பொதுவாக எந்தவொரு அலுவலகத்திலும் பாசிட்டிவான பணிச்சூழலை ஏற்படுத்த ஊழியர்களின் முயற்சிக்குப் பாராட்டும் அங்கீகாரமும் வழங்கப்படும்.

ஷாக் கொடுத்த நிறுவனம்: பல்வேறு அலுவலகங்களிலும் பெஸ்ட் ஊழியர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு ஊழியர்களை ஊக்குவிப்பார்கள். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி இந்த பெஸ்ட் ஊழியர் விருதை வாங்க வேண்டும் என்பதற்காகவே பலரும் உழைப்பார்கள்.. ஆனால், பிரபல நிறுவனம் ஒன்று பெஸ்ட் ஊழியர் ஒருவரை டிஸ்மிஸ் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதிலும் அவர்கள் அதற்குச் சொன்ன காரணம் தான் நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இது குறித்த தகவல்களை ஒருவர் ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பணிபுரியும் நிறுவனத்தின் நடவடிக்கையை விமர்சித்து அந்த நபர் பதிவிட்டுள்ளார். அந்த நிறுவனம் தனது மிகவும் திறமையான ஊழியர்களில் ஒருவரை டிஸ்மிஸ் செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் மிகச் சிறந்த ஊழியர்களில் அவரும் முக்கியமான நபராம்.. இருப்பினும், தங்கள் விருப்பப்படி யாரையும் டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதைக் காட்ட அவரை டிஸ்மிஸ் செய்துள்ளது அந்த நிறுவனம்.
மதிப்பதில்லை: அந்த நபர் தனது மேலும் கூறுகையில், "நான் வேலை செய்யும் இந்த நிறுவனம் ரொம்பவே மோசமாக நடந்து கொள்கிறது. ஊழியர்களின் கமிஷனை ஓவராக திருடுகிறது. ஒப்பந்த விதிமுறைகளையும் மதிப்பதில்லை. 5 நிமிடங்கள் பாத்ரூம் சென்றால் கூட பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டுப் போய்விடுங்கள் என மிரட்டுகிறார்கள். ஒவ்வொரு நாளை கடத்துவதும் இங்கே மிகப் பெரிய போராட்டமாகவே இருக்கிறது.
இப்படிதான் அன்று ஒரு நாள் என்னை வேலையை விட்டுத் தூக்கப் போவதாக மிரட்டினர். இன்று எங்கள் நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் டாப்பில் இருந்த ஊழியர் ஒருவரை டிஸ்மிஸ் செய்தனர். அவர் டார்கெட்டை பூர்த்தி செய்யாததால் வேலையை விட்டுத் தூக்கியதாகத் தெரிவித்தனர். ஆனால், உண்மை என்னவென்றால் அவரது கமிஷன் தொகையும் மேலே உள்ளவர்கள் திருடிவிட்டனர். இது குறித்துக் கேட்டதாலேயே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
என்ன காரணம்: எங்கள் மேனேஜர் இது குறித்துக் கூறியிருந்தார். கமிஷன்கள் அல்லது ஒப்பந்தங்களை மீறுவது குறித்து நாங்கள் நிர்வாகத்துடன் சண்டையிடக்கூடாதாம். அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் டிஸ்மிஸ் செய்யலாம் என்று எங்கள் மேனேஜர் கூறினார்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் எங்கே நடந்தது, நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்களை அவர் வெளிப்படையாகக் கூறவில்லை.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். கமிஷன்களுக்கு மட்டும் ஆசைப்படும் நிறுவனங்கள் இப்படிச் செய்வது மிகவும் தவறான போக்கு என்றும் ஊழியர்களை முறையாக நடத்தாக நிறுவனம் நிச்சயம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது என்றும் அவர்கள் சாடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications