வருமான வரி கணக்கு தாக்கல் செய்துட்டீங்களா.. இன்றுதான் கடைசி நாள்.. ஆன்லைனில் எப்படி செய்ய வேண்டும்?
டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதி ஆகும். 2023- 2024 ஆம் ஆண்டின் வருமான வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்.
இதுகுறித்து வருமான வரித் துறை தெரிவித்துள்ளதாவது: கடந்த 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட 6 கோடி கணக்குகளில் 88 சதவீதம் அதாவது 4.46 கோடி கணக்கு தாக்கல்கள், ஆன்லைன வாயிலாக சரிபார்க்கப்பட்டுள்ளன.
சரிபார்க்கப்பட்ட வருமான வரி தாக்கல்களில் 2.69 கோடி தாக்கல்களுக்கான பணிகள் முடிவுற்றுள்ளன. வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். வருமான வரி தாக்கல் செய்வது, வரி செலுத்துவது போன்ற பல சந்தேகங்களுக்கு உதவ வருமானத் துறையின் உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.

கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் வரை சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் இந்த சேவை வழங்கப்படும். இத்துடன் தொலைபேசி, வாட்ஸ் ஆப் மற்றும் சமூகவலைதளங்களிலும் ஜூலை 31 ஆம் தேதி வரை உதவி மைய சேவைகள் வழங்கப்படும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
வருமான வரியை எப்படி தாக்கல் செய்யலாம் என்பதை பார்க்கலாம். முதலில் படிவம் 16, படிவம் 26 AS, படிவம் 16A, வரி சேமிக்களுக்கான ஆதாரம், வங்கிக் கணக்கு விவரங்கள், டிடிஎஸ் சர்ட்பிகேட், வருமான வரி விவரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிவு 80 சியின் கீழ் சேமிப்பு முதலீடுகள், பிரிவு 80 டியின் கீழ் செலுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியங்கள், பிரிவு 80 ஜியின் கீழ் செய்யப்பட்ட நன்கொடைகள் ஆகியவை இருந்தால் அதையும் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒவ்வொன்றாக பதிவு செய்ய வேண்டும். இதற்காக வருமான வரித் துறையின் சைட்டுக்கு செல்ல வேண்டும். https://www.incometax.gov.in/iec/foportal என்ற சைட்டுக்கு செல்ல வேண்டும். நீங்கள் பழைய பயனர் என்றால் உங்கள் பான் கார்டு எண், பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும். புதிய பயனாளி என்றால் பான் என்னை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். அதுதான் உங்களது யூசர் ஐடியாகும்.
லாகின் செய்தவுடன் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். e file menu கிளிக் செய்து income tax return என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் Assessment year என்பதை கிளிக் செய்து ஐடிஆர் ஃபார்ம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆன்லைனில் தாக்கல் செய்பவர்கள் ஐடிஆர் 1, ஐடிஆர் 4 என்பதை தாக்கல் செய்ய வேண்டும்.
ஒரிஜினல் அல்லது ரிவைஸ்டு ரிட்டர்ன் என்பதை தேர்வு செய்து சப்மிஷன் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு கன்டினியூ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கேட்கக் கூடிய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். E verification செய்ய வேண்டும். ஆதார் ஓடிபி மூலம் வருமான வரி ரிட்டர்னை வெரிபிகேஷன் செய்யலாம். இதையடுத்து பிரீவியூ அன்ட் சப்மிட் என்பதை கிளிக் செய்து கொடுத்த விவரங்களை சரி பார்த்த பிறகு சப்மிட் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் சப்மிட் செய்யப்பட்டது குறித்து பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போனுக்கு வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications