சுங்க சாவடி வசூல் ரூ. 54,811.13 கோடி! தமிழகத்தில் ரூ.4,221 கோடி 'கலெக்சன்'-மாநிலங்களுக்கு 'பெப்பே'!
டெல்லி: 2023-24 நிதியாண்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை கட்டண வசூலிப்பு இடங்களில் மொத்தக் கட்டண வசூல் ரூ. 54,811.13 கோடியாகும். 2023-24 நிதியாண்டு முதல் பயனர் கட்டண விகிதங்களில் சராசரி அதிகரிப்பு 2.55% ஆக இருக்கும். இதனால் முந்தைய வசூல் தொகையில் சுமார் 1400 கோடி ரூபாய் அதிகரிக்கலாம் என்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008, விதி 5ன்படி, பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், பயனர் கட்டண விகிதங்கள் ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

2023-24 நிதியாண்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை கட்டண வசூலிப்பு இடங்களில் மொத்தக் கட்டண வசூல் ரூ. 54,811.13 கோடியாகும். 2023-24 நிதியாண்டு முதல் பயனர் கட்டண விகிதங்களில் சராசரி அதிகரிப்பு 2.55% ஆக இருக்கும். இதனால் முந்தைய வசூல் தொகையில் சுமார் 1400 கோடி ரூபாய் அதிகரிக்கலாம் என்றார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள 917 சுங்க சாவடிகளில் கடந்த ஆண்டு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்கிற விவரங்களையும் ராஜ்யசபாவில் நிதின் கட்கரி வெளியிட்டார். தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மற்றும் தொப்பூர் சுங்க சாவடிகளில்தான் ரூ200 கோடிக்கும் அதிகமாக சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு சுங்க சாவடி வசூல் ரூ4,221 கோடி எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுங்க சாவடிகள் கட்டணங்கள் ஏலம் மூலமாக நியமிக்கப்பட்ட பயனர், கட்டண சேகரிப்பு முகவர்களால் வசூலிக்கப்படுகிறது. 48452 கிமீ தொலைவில் சுங்க சாவடிகள் நாடு முழுவதும் உள்ளன. தமிழ்நாட்டில் 3,109 கிமீ தொலைவில் 67 சுங்க சாவடிகள் உள்ளன. இவற்றின் மூலம் ரூ4,221 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 102 சுங்க சாவடிகள் மூலமாக ரூ6,695 கோடியும் ராஜஸ்தானில் 142 சுங்க சாவடிகள் மூலம் ரூ5,885 கோடியும் சுங்க கட்டணம் வசூலாகி இருக்கிறது. இந்த கட்டணங்களில் மாநிலங்களுக்கு எந்த ஒரு நிதிப் பகிர்வும் தரப்படுவதில்லை என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications