10.. லிஸ்ட்லயே இல்லையே.. டோல்கேட்டே தான்.. திடீரென நிதின் கட்காரியை சந்தித்த தமிழச்சி தங்க பாண்டியன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.

டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை வியாழக்கிழமை தென் சென்னை தொகுதி திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சந்தித்தார். அப்போது அவர், சுங்கச்சாவடியை அகற்றுவது தொடராக நிதின் கட்கரியிடம் மனு அளித்தார்.

Toll gate removal : DMK MP Tamilachi Thangapandian met Union Highways Minister Nitin Gadkari

அவர் தனது மனுவில், தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இந்த தகவலை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இன்று‌ (27.07.2023), புதுடெல்லியில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின்‌ கட்கரியைச் சந்தித்து, தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் எனவும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமெனவும் மனு அளித்தேன்." என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் 60 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில முக்கிய ஊர்களில் மக்கள் நுழையும் போது அவர்களிடமும் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கும் எல்லாம் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக சொல்வது என்றால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச் சாவடிக்கும், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடிக்குமான இடைவெளி 48 கி.மீ தான் உள்ளது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பில்லூர் அருகே அமைப்பது தான் சரியானதாக இருக்கும். ஆனால், சென்னையில் இருந்து சேலம் செல்லும் வாகனங்களிடம் கண்டிப்பாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் சுங்கச்சாவடி அமைத்திருப்பார்கள்.

அப்படியே உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்திவிட்டு கள்ளக்குறிச்சி நோக்கி சென்றால், கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். வெறும் 39 கி.மீ இடைவெளியில் இரண்டு சுங்கச்சாவடி இருக்கும். கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த சுங்கச்சாவடி அங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு அடுத்தாக அதே சாலையில் வீரசோழபுரம் சுங்கச்சாவடிக்கும், சேலம் மாவட்டம் நத்தக்கரை சுங்கச்சாவடிக்குமான இடைவெளி 42 கி.மீ மட்டுமே இருக்கும். இப்படி தமிழ்நாடு முழுக்க அதிகமான சுங்கச்சாவடிகளை கட்டணம் வசூலிக்கும் நோக்கில் முக்கிய நகரங்களை குறிவைத்து அமைத்துள்ளார்கள்.

நிதின் கட்காரி கூற்றுப்படி 60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்றால் தமிழ்நாட்டில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதனை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு குரல் கொடுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு மனது வைக்க வேண்டும். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்திருக்கிறார். மத்திய அரசு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+