நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான்... விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் உருக்கமான கடிதம்..!
டெல்லி: குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு அவர் எழுதியுள்ள 8 பக்க கடிதத்தில் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், தாமும் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன் தான் என்றும் இதனால் விவசாயிகள் படும் துயரத்தை தாம் உணர்ந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

விவசாயிகள் போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு மேல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டும் சுமூக தீர்வுகாண முடியவில்லை. இந்நிலையில் விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உணர்ச்சிப்பூர்வமாக கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியுள்ள முக்கிய வரிகள் மட்டும் இங்கே;

விவசாயிகளுக்கு
* விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக கடந்த 6 ஆண்டு கால மோடி ஆட்சியில் எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
*குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மண்டி விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன.
*குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு தயார்.

நானும் விவசாயி
* நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் தான்; அதனால் அவர்கள் படும் துயரத்தை குழந்தை பருவத்தில் இருந்தே அறிவேன்.
* புதிய விவசாய சட்டங்களுக்கு பெரும்பாலான விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
* விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது.
*குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்; பொய்களை விவசாயிகளை நம்ப வேண்டாம்.

போராட்டத்துக்கு முடிவு
இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிகளில் இந்தக் கடிதமும் இன்று. இந்தியில் எழுதப்பட்டுள்ள அமைச்சரின் 8 பக்க கடிதம், போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications