மத்திய அரசு திரும்பப்பெற்ற "தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா”.. சொல்வது என்ன? -புரிந்துகொள்ள 10 தகவல்
டெல்லி: கடந்த ஆண்டு நிறைவேற்றி தற்போது மத்திய அரசால் வாபஸ் பெறப்பட்டு இருக்கும் தனிநபர் தரவு பாதுகாப்பு (PDP) மசோதாவை என்றால் என்ன? என்பதை பின்வரும் தகவல்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இணையதளங்கள், செயலிகள் போன்ற டிஜிட்டல் தளங்களில் தனிநபர்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு Personal Data Protection Bill எனப்படும் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்தது. இந்த மசோதாவில் இடம்பெற்ற விசயங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதிராகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிராகவும் இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி தனிநபர் பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது திரும்பப்பெறுவதாக மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்தார். விரிவான சட்ட கட்டமைப்புக்கு ஏற்ப புதிய மசோதாவை கொண்டு வர உள்ளதால் இந்த மசோதாவை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா என்றால் என்ன?
1. நிறுவனங்கள் குறிப்பிட்ட காரணத்துக்காக தேவைப்படும் தரவை தனிநபரின் ஒப்புதலுடன் பெற வேண்டும்.
2. தரவை பெறுவது, திருத்தம் செய்வது, நீக்குவது, பகிர்வது, வெளியிடுவதை கட்டுப்படுத்துவது, தடுப்பது போன்ற உரிமைகள் தனிநபருக்கு வழங்கப்படும்.
3. தரவு பாதுகாப்பு ஆணையத்தை அமைத்து அதற்கென 6 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
4. தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, எல்லாம் சட்டப்படி நடப்பதை உறுதி செய்யும்.
5. தேர்தல், மாநில பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு போன்றவற்றில் தாக்கம் ஏற்படுத்தும் சமூக ஊடக இடைத்தரகர் குறித்த விதியை ஏற்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம். அந்த இடைத்தரகர் குறிப்பிட்ட தரவை நம்பகத்தன்மையோடு அறிவிக்கவும் அனுமதி.
6. தரவு அனுமதியின்றி பகிரப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஆணையத்தை அணுகலாம்.
7. இந்த சட்டத்திலிருந்து மத்திய அரசின் எந்த நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்க அதிகாரம்.
8. சட்டத்தின் கீழுள்ள கடமைகளுக்கு அடிபணிந்து நடக்க நடைமுறை குறியீட்டை குறிப்பிட அதிகாரம்.
9. சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படப்போகும் தண்டனைகள் மற்றும் இழப்பீடுகளை அறிவிக்க தீர்ப்பு அதிகாரிகளை நியமிப்பது.
10. தீர்ப்பளிக்கும் அதிகாரியின் மேல்முறையீட்டை விசாரித்து தீர்ப்பதற்கு மேல்முறையீடு தீர்ப்பாயம். சட்ட விதிகளை மீறினால் அபாரம் விதிக்கலாம்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications