இந்திய பொருளாதாரத்தை திருப்பி போட வைத்த டாப் 5 பட்ஜெட்கள்.. இதோ முழு விவரம்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 1947 முதல் இதுவரை 73 முழு பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல் பட்ஜெட்டை ஆர் கே சன்முகம் செட்டி தாக்கல் செய்தார். இந்தியாவில் இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பட்ஜெட்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்துள்ளது. இதனால், நடப்பு 2024 - 25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 2023 - 24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

டாப் 5 பட்ஜெட்கள்: இந்த நிலையில், நடப்பு 2024 - 25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். வருமான வரி கட்டமைப்பில் மாற்றம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எற்பட்டுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க இந்திய பட்ஜெட் வரலாற்றில் கவனிக்க வைத்த சில பட்ஜெட்களை பற்றி இங்கே பார்ப்போம். அதாவது, இந்திய பொருளாதாரத்தை திருப்பி போட வைத்த டாப் 5 பட்ஜெட்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
அரசு ஊழியர்களுக்கு அடித்த லாட்டரி.. பாலை வார்க்க போகும் மோடி.. வருகிறது நிர்மலாவின் அந்த அறிவிப்பு?
1957 - 58 டிடி கிருஷ்ணமாச்சாரி: கடந்த 1957 - 58 ஆம் ஆண்டு டிடி கிருஷ்ணமாச்சாரி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெரிய அளவில் வரி சீர்திருத்தங்கள் இருந்தன. செல்வ வரி (wealth Tax) அறிமுகம் செய்யப்பட்டது. தனி நபரின் மொத்த சொத்துக்களின் மதிப்பு அடிப்படையில் இந்த வரி விதிக்கப்பட்டது.
இந்திய வரி விதிப்பு முறையில் மிக முக்கியமான மாற்றமாக இந்த பட்ஜெட் அமைந்து இருந்தது. வெல்த் டேக்ஸ் எனப்படும் செல்வ வரி பல்வேறு வடிவங்களில் இந்திய வரி விதிப்பு முறையில் அடுத்த பல தாசப்தங்களுக்கு இருந்தது. 2015- ஆம் ஆண்டில் தான் இந்த வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
மத்திய பட்ஜெட்.. இந்த ஒரு அறிவிப்பு போதும்.. தமிழ்நாடு ஆகாயத்தில் பறக்கும்.. ரொம்ப முக்கியம்
மன்மோகன் சிங் 1991-92: கடந்த 1991-92 நிதி ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்டும் இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பட்ஜெட் ஆகும். இந்தியா எதிர்கொண்ட பல பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விதமாக மன்மோகன் சிங்க் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் அமைந்து இருந்தது.
சிறந்த பொருளாதார நிபுணராக விளங்கிய மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சுங்க வரி 220 சதவிகிதத்தில் இருந்து 150 ஆக குறைக்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய வர்த்தகம் போட்டி போட உதவியது. நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தின் போது, பல சுதந்திரமான கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன. பொருளாதார சுதந்திரம் ஊக்குவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட் அன்னிய முதலீடு, பொருளாதரத்தில் நம்பிக்கை ஆகியவற்றை எற்படுத்தி இந்தியா பெரும் பொருளாதார சக்தியாக மாற வழி ஏற்படுத்தி கொடுத்தது.

* 1997 - 98: தேவகவுடா கேபினட்டில் நிதி அமைச்சராக பதவி வகித்த ப சிதம்பரம் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டும் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நிபுணர்களால் கனவு பட்ஜெட் என சொல்லப்பட்ட இந்த பட்ஜெட் கார்ப்பரேட் வரி, தனி நபர் வரி ஆகியவற்றை கணிசமாக குறைக்கப்பட்டது. தனிநபர் வருமன வரி விகிதம் 40 சதவிகிதம் என்று இருந்ததை 30 சதவிகிதமாக குறைத்தார்.
* 2000 - 2001: அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின் காவின் பட்ஜெட் லேண்ட்மார்க் பட்ஜெட்டாக பார்க்கப்பட்டது. கணினி உள்பட 21 பொருட்களுக்கான சுங்க வரியை குறைத்து ஐடி துறையில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது, இந்தியாவில் ஐடி துறை பெரும் வளர்ச்சி பெற உதவியது.
* 2016 - 17: அருண் ஜெட்லி கடந்த 2016 - 17 தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட்டை ஒன்றாக இணைத்தார். 92 ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை இதன் மூலம் மாற்றப்பட்டது. அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்த முறையை மாற்றிய பிறகு அதுவே தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications