மக்களே மகிழ்ச்சியான அறிவிப்பு.. 30 நாள் தான் கெடு.. செல்போன் நிறுவனங்களுக்கு டிராய் அதிரடி உத்தரவு
இருந்து வரும் தொல்லைகளை தடுக்க டிராய், செல்போன் நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: 30 நாட்களுக்குள் போலியான தலைப்புகளில் விளம்பரங்கள் அனுப்பப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களோ அல்லது அதன் ஊழியர்களோ பொதுமக்களின் செல்போன்களுக்கு விளம்பர குறுந்தகவல் அனுப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் செல்போனுக்கு தினமும் 10 பேர் கால் செய்து இதை வாங்குங்கள், அதை வாங்குகள் என்று உங்கள் டார்ச்சர் செய்கிறார்களா? உங்கள் செல்போன் எண்ணிற்கு தேவையற்ற விளம்பரங்கள் அடிக்கடி மெசேஜ் ஆக வருகிறது. வங்கிகளை போலவே வரும் போலியான விளம்பரங்கள் வருகிறதா? இப்படியான விளம்பரங்கள் மற்றும் அழைப்புகளால் தினசரி தொல்லையை சந்திப்பவர்களுக்கு டிராயின் அறிவிப்பு நிச்சயம் மகிழ்ச்சியை தரும்.
ஏனெனில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், போலியான தலைப்புகளில் விளம்பரம் வருவதை தடுக்க வேண்டும் என்று கண்டித்துள்ளது- கவர்ச்சிகரமான அதேநேரம் போலியான தலைப்புகளில் விளம்பரங்களை அனுப்பி ஏமாற்றுப்பவர்களிடம் இருந்து மக்களை செல்போன் நிறுவனங்கள் காக்க வேண்டும்.

மெசேஜ்கள்
தன்லா பிளாட்ஃபார்ம் சிஇஒ உதய் ரெட்டி இதுபற்றி கூறும் போது, எந்த டெலிமார்க்கெட்டிங் நிறுவனமாக இருந்தாலும வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய மெசேஜ்களின் தலைப்புகள் மற்றும் டெம்ப்ளேட்களை கண்டிப்பாக டிராய்யின் DLT எனப்படும் தளத்தில் பதிவு செய்தே வெளியிட வேண்டும். அப்படி பதிவு செய்யப்படாத தலைப்புகள் மற்றும் மெசேஜ் டெம்ப்ளேட்களை முறையே 30 மற்றும் 60 நாட்களுக்குள் தடுக்குமாறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
மேலும் போலியான கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தவறான தகவல்கள் மெசேஜ் ஆக அனுப்பபடுவதை தடுக்க, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் விரைந்து செயல்படுமாறும் டிராய் அறிவுறுத்தியுள்ளது.
தொலைத்தொடர்ப்பு துறை சிறப்பாக செயல்பட டிராயின் இந்த வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. இதைத்தான் எங்கள் தன்லா நிறுவனம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

காலவதி
DLT இல் பதிவு செய்யப்பட்டுள்ள 50 லட்சம் விளம்பர மெசேஜ் டெம்ப்ளேட்களில், கிட்டத்தட்ட 80 சதவீதம் ஆறு மாத காலமாக காலாவதியானவை ஆகும். இதை தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை தருகிறது. இதில் பொருத்தமற்ற தகவல்களை சேர்த்து தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. TRAI இன் உத்தரவுகளைப் பின்பற்றுவது நிச்சயமாக மிகவும் தேவையான ஒழுங்குமுறையைக் கொண்டுவரும், ஃபிஷிங் எதிர்ப்பு தொழில்நுட்ப தளமான Wisely ATP ஐ பிப்ரவரி 27, 2023 அன்று ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC) தான்லா பிளாட்ஃபார்ம்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது" இவ்வாறு உதய் ரெட்டி கூறினார்.

30 நாட்கள்
இதனிடையே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) செல்போன் சேவை நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களோ அல்லது அதன் ஊழியர்களோ பொதுமக்களின் செல்போன்களுக்கு விளம்பர குறுந்தகவல் அனுப்புவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பதிவு செய்யப்பட்ட தலைப்புகளைத் தவிர போலியான தலைப்புகளில் விளம்பரங்கள் அனுப்பப்படுவதை 30 நாட்களுக்குள் தடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, தற்காலிக தலைப்புகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செயலிழக்கச் செய்ய வேண்டும்" இவ்வாறு அறிவுறுத்தி உள்ளது.

டெலிமார்க்கெட்டர்
பிரபல வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பெயரில் சில அங்கீகாரம் பெறாத சில நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட தலைப்புகளைப் போலவே இருக்கும் (சிறிய மாற்றத்துடன்) தலைப்புகளில் விளம்பர குறுந்தகவலை அனுப்பி தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் இருந்து விளம்பர குறுந்தகவல்களை அனுப்புவதாகவும் புகார் வந்தது. இதையடுத்தே டிராய் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தொலைபேசி எண்களைப் பயன்படுத்தும் டெலிமார்க்கெட்டர்கள் உட்பட அங்கீகரிக்கப்படாத அல்லது பதிவுசெய்யப்படாத டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து வரும் செய்திகளைத் தடுக்க, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கடும் நடவடிக்கை எடுக்கவும் டிராய் உத்தரவிடுடள்ளது

டிஎன்டி சேவை
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டர்கள் அல்லது டெலிமார்க்கெட்டர்களால் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி (10 இலக்க எண்கள்) விளம்பரச் செய்திகள் அனுப்பப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேநேரம் தொடர்ந்து தொல்லை தந்து தவறு செய்யும் டெலிமார்க்கெட்டர்கள் மீதும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கவும், தொடர்புடைய சட்டச் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கவும் டிராய் அறிவுறுத்தி உள்ளது. உங்களிடம் ஓயாமல் கிரிடிட் கார்டு வேணுமா, லோன் வேண்டுமா, இன்சூரன்ஸ் போட்டாச்சா, வீடு வாங்குறீங்களா, கார் வாங்குறீங்களா, பைக் வாங்குறீங்களா என்று டெலிமார்க்கெட்டிங்கில் இருந்து ஓயாமல் தொல்லை வந்தால் அதை தடுக்க உங்கள் செல்போனில் உள்ள செல்போன் ஆப்பை ஓபன் செய்யுங்கள், ஏர்டெல், ஜியோ, அல்லது வோடபோனாக இருந்தால் அந்த ஆப்பில் சென்று நேரடியாக dnd என்ற ஆப்சனை செலக்ட் செய்து அனைத்து விளரம்பங்களையும் தடுக்கலாம்.












Click it and Unblock the Notifications