2 மணி நேரம் நடந்த சரத் பவார்-அதானி மீட்டிங்.. "அவரை" எதிர்க்கவும் தயார்!" ஆவேசமான மஹுவா மொய்த்ரா
மும்பை: சரத் பவார்- கவுதம் அதானி இடையே சந்திப்பு நடந்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் என்சிபி எனப்படும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சராத் பவார். 2024 தேர்தலுக்குத் தேசிய கட்சிகளை ஒன்றிணைப்பதில் இவரது பங்கு முக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக இவர் கூறும் கருத்துகள் பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதானி விவகாரத்தை எடுத்து கடுமையாகச் சாடி வரும் நிலையில், அதானிக்கு ஆதரவாக சரத் பவார் சமீபத்தில் கருத்தைக் கூறியிருந்தார்.

கூட்டணியில் சலசலப்பு: இது எதிர்க்கட்சிகள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே நேற்று வியாழக்கிழமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அதானி நேரில் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. இருவருக்கும் இடையேயான இந்த மீட்டிங் சுமார் இரண்டு மணி நேரம் நீட்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இந்த இது குறித்து திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதானியுடன் எந்த அரசியல்வாதியும் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்று தெரிவித்தார். அதானி விவகாரத்தில் தொடர்ந்து ஆக்ரோஷமாக விமர்சித்து வரும் மஹுவா மொய்த்ரா, அந்த தொழில் அதிபர் தன்னையும் வேறு சிலரையும் தனது நண்பர்கள்/ டீலர்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் இருப்பினும் அவர்களால் அது முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மஹுவா மொய்த்ரா: இது குறித்து திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, "அதானியுடன் தனித்தனியாக விவாதிக்க எதுவும் இல்லை.. அரசு நடவடிக்கை எடுக்கும் வரை எந்த அரசியல்வாதியும் அவருடன் எந்தவொரு தொடர்பையும் வைத்திருக்கக் கூடாது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், பிரபல இந்தி பழமொழியைப் பதிவிட்டு சரத் பவாரையும் மறைமுகமாகச் சாடியுள்ளார். சராத் பவார் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிடும் வகையில், "பெரிய மராட்டியர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
எதிரானது இல்லை: மேலும் அவர், "உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டிலும் நாட்டை முன்னிறுத்தும் நல்ல அறிவு இருக்கும் என்று நம்புவோம். எனது இந்த ட்வீட் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு எதிரானது இல்லை. மாறாகப் பொதுநலன் சார்ந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணைக்குழு தேவை என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வந்தது. இந்தச் சூழலில் தான் விசாரணைக்குழு தேவையில்லை என்று சமீபத்தில் சராத் பவார் கூறியிருந்தார். இருப்பினும், இது எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பு உருவானது. இதையடுத்து பின் மீண்டும் நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைவதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications