Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்தலாக் தடையால் முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது: பழைய நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், பேசிய பிரதமர் மோடி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தலாக் தடை மசோதா பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் எடுக்கபப்ட்டுள்ளது என்று கூறினார்.

5 நாட்கள் மட்டுமே கொண்ட நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாள், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த கூட்டம், இன்று முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கிறது. இத்தொடரில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் பற்றி விவாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

Triple talaq ban has brought justice to Muslim women: Modis speech in Old Parliament

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் லோக்சபா மதியம் 1.15-க்கும், ராஜ்யசபா மதியம் 2.15 மணிக்கும் கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பாரத் பெயர் மாற்ற விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற எதிர்பாராத முக்கிய முடிவுகள் குறித்த மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் சிறப்பு கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:- இது புதிய எதிர்காலத்தின் தொடக்கம். நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் உறுதியேற்க வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இன்று இடம் பெயர்வது புதிய எதிர்காலத்திற்கான தொடக்கம்.

அரசியல் சாசனத்தில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்ல இருக்கிறோம். பழைய நாடாளுமன்றத்தின் கவுரவம் ஒருபோதும் குறையக் கூடாது. வெறும் பழைய நாடாளுமன்ற கட்டிடம் என்று நாம் விட்டு விடக்கூடாது.

எனவே, நீங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டால் இதை "சம்விதான் சதான்" என அறியப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முத்தலாக் தடை மசோதா பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் எடுக்கபப்ட்டுள்ளது. இந்த முத்தலாக் தடையால் முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைத்து இருக்கிறது. முஸ்லீம் மதத்தை சேர்ந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு இந்த நடாளுமன்றம் நீதி வழங்கியது.

முத்தலாக்கிற்கு எதிரான மசோதா இந்த நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திருநங்கைகளுக்கு நீதி வழங்கும் சட்டங்களும் இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளுள் ஒன்றாக நாட்டை மாற்ற வேண்டும். தற்சார்பு இந்தியா திட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக நீதிக்கு நாடாளுமன்றம் எப்போதும் முக்கியத்துவம் அளித்து நாடாளுமன்றம் முடிவுகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+