பாஜக எம்.பிக்களுக்கு விப் நோட்டீஸ் அனுப்பிய கொறடா.. நாளை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது?
முத்தலாக் தடை சட்ட மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
டெல்லி: முத்தலாக் தடை சட்ட மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக தற்போது பாஜகவின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்களுக்கு விப் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்களை, இஸ்லாமிய ஆண்கள் தலாக் என்று மூன்று முறை கூறி விவகாரத்து செய்யும் முறையை தடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு தடை விதித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனாலும் இதற்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. சென்ற மோடி தலைமையிலான ஐந்தாண்டு ஆட்சியிலேயே லோக்சபாவில் இந்த முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஆனால் அப்போது பாஜகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.
இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லை என்பதால் தொடர்ந்து அவசர சட்டம் இயற்றி இதை அரசு பயன்படுத்தி வருகிறது. இதை அவசர சட்டமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பரில் மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்த நிலையில் தேர்தல் நடந்து முடிந்து லோக்சபாவில் மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக தாக்கல் செய்தது. இது லோக்சபாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இனி ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் நாளை எல்லா எம்பிக்களும் மாநிலங்களவையில் இருக்க வேண்டும் என்று பாஜக கொறடா கட்சி எம்பிக்களுக்கு விப் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்.
தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, தனி நபர்களை தீவிரவாதிகளாக உபா சட்டத்திருத்த மசோதா, இஸ்லாமிய பெண்களுக்கான திருமண பாதுகாப்பு மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஆகிய மசோதாக்கள் முத்தலாக் தடை சட்ட மசோதாவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்களும் நாளை பெரும்பாலும் மாநிலங்களவை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக பாஜக கொறடா தங்கள் எம்பிக்களுக்கு விப் நோட்டிஸ் அனுப்பி உள்ளார் என்கிறார்கள்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications