மேட் இன் இந்தியா ஆப்பிள் மொபைல்களுக்கு.. அமெரிக்காவில் கூடும் மவுசு! ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனாவுக்கு டிரம்ப் விதித்த வரி காரணமாக, இந்தியாவில் ஆப்பிள் மொபைல் உற்பத்தியை நிறுவனம் வேகப்படுத்த இருக்கிறது. இது இந்திய பொருளாதாரத்தில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தும்.

சீனாவுக்கு 10%, மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு தலா 25% வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் இந்த நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களின் விலை 10%-25% வரை உயரும். எனவே மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள தங்கள் உற்பத்தி ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள், மோட்ரோலா உள்ளிட்ட நிறுவனங்கள் யோசித்து வருகின்றன.

trump apple economic

குறிப்பாக சீனாவில் நிறுவப்பட்டிருக்கும் ஆலைகளை இந்தியாவுக்கு மாற்றும் எண்ணத்தில் ஆப்பிள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி இல்லை என்பதே இதற்கு காரணம்.

தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த டிக்சன் (Dixon) டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் சுனில் வச்சானி, “அமெரிக்காவின் வரியால் இந்தியாவுக்கு குறுகிய கால வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால் அமெரிக்காவுடனான நீண்டகால வர்த்தகத்திற்கு நாம் முழுமையாக தயாராக வேண்டும். இப்படி நடந்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சுமூகமானதாக இருக்கும். இந்தியாவை பொறுத்தவரை ஏற்கெனவே உழைப்பு சக்தி அதிகம் உள்ள நாடாக இருக்கிறது.

இந்தியாவின் கொள்ளை வகுப்பாளர்களும், தொழிற் நிறுவனங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்த தவற கூடாது. கிடைக்கும் வாய்ப்புக்கு ஏற்ப தொழிற் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் ஒரு விரிவான ஒப்பந்தம் உடனடியாக அவசியமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை போட்டியாக எடுத்துக்கொண்டு நாம் நம்முடைய திறமையை நிரூபிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2024ல் இந்தியாவில் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்கள் உற்பத்தி மொத்த மொபைல் உற்பத்தியை 20.4 அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ ரூ.1.77 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்தியது. இது ஒரு ரெக்கார்ட் பிரேக்கிங் சாதனையாகும். ஆப்பிள் 65% ஏற்றுமதியையும், சாம்சங் 20% ஏற்றுமதியையும் நம்பிதான் இருக்கின்றன. சர்வதேச அளவில் இந்தியாவிலிருந்து 15% அளவுக்கு இந்த மொபைல்கள் ஏற்றுமதியாகியுள்ளன.

இப்படி இருக்கையில் அமெரிக்காவின் நடவடிக்கையை பயன்படுத்திக்கொள்ள இந்திய எலக்ட்ரானிக் துறை அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+