துருக்கியின் தூக்கத்தை கெடுத்த இந்தியா..கிரீஸ் நாட்டை வைத்து மாஸ்டர் மூவ்..பறக்கும் LR - LACM ஏவுகணை
டெல்லி: நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் துருக்கியின் தூக்கத்தை கெடுத்துள்ளது நம் நாடு. பாகிஸ்தானுடன் சேர்ந்து சீண்டிய துருக்கிக்கு, கிரீஸ் நாட்டின் மூலமாக நம் நாடு செக் வைத்துள்ளது. ஏற்கனவே கிரீஸ் மற்றும் துருக்கிக்கு இடையே பிரச்சனை உள்ள நிலையில் நம் நாட்டின் இந்த நடவடிக்கை துருக்கியின் தூக்கத்தை கெடுத்துள்ளது. அப்படி என்ன நடக்கிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
துருக்கி.. நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கும் எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.

சமீபத்தில் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்தது. இது போராக மாறிய நிலையில் துருக்கி, பாகிஸ்தானுக்கு உதவியது. துருக்கி நாட்டின் ட்ரோன்கள் மற்றும் அந்த நாட்டின் ஆபரேட்டர்களை பயன்படுத்தி நம் நாட்டின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது.
ஆனால் நம் நாடு சாமர்த்தியமாக செயல்பட்டு பாகிஸ்தான், துருக்கியின் முகத்தில் கரியை பூசியது.
ஆனாலும் கூட துருக்கி திருந்தவில்லை. அந்த நாட்டின் அதிபர் தையிப் எர்டோகன் நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் துருக்கிக்கு பாடம் கற்பிக்க நம் நாடு முடிவு செய்து அதற்கான வேலைகளை தொடங்கி வருகிறது. அந்த வகையில் தான் கிரீஸ் நாட்டின் மூலமாக துருக்கியின் தூக்கத்தை கெடுத்துள்ளது நம் நாடு துருக்கியும், கிரீஸ் நாடும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. இருநாடுகள் இடையே கடும் மோதல் போக்கு இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் துருக்கி தான். ஏஜியன் கடல் தீவுகள் தொடர்பாக கிரீஸ் மற்றும் துருக்கி இடையே பிரச்சனை உள்ளது. இந்த தீவின் பெரும்பாலான பகுதி கிரீஸ் வசம் உள்ளது. ஆனால் ஒருசில இடங்கள் துருக்கியிடம் இருக்கிறது. இந்த பகுதி எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான முக்கிய பகுதியாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் துருக்கி இந்த இடத்தை கைப்பற்ற முயன்றது. அன்று முதல் இருநாடுகள் இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. இன்று வரை மோதல் நீடித்து வருகிறது.
இப்படியான சூழலில் தான் துருக்கியின் தூக்கத்தை நம் நாடு கெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நம் நாடு எல்ஆர் -எல்ஏசிஎம் (Long Range - Land Attack Cruise Missile) எனும் லாங்க் ரேஞ்ச் - தரையில் இருந்து தாக்கும் க்ரூஸ் ஏவுகணையை சோதனை செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்த ஏவுகணை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் டிஆர்டிஓ தயாரிப்பாகும்.
இந்த எல்ஆர் - எல்ஏசிஎம் ஏவுகணையை தான் நம் நாடு, கிரீஸ் நாட்டுக்கு வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக தருக்கி நாட்டின் பிரபல ஊடகமான TRHaber செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‛‛ பாகிஸ்தான் மீதான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் துருக்கி, இந்தியாவுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருந்து. பாிகஸ்தானை ஆதரித்தது. கிரீஸ் நாட்டுக்கு எல்ஆர் - எல்ஏசிஎம் ஏவுகணையை வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது கிரீஸ் நாட்டுக்கும் கிடைக்கும் பட்சத்தில் துருக்கிக்கு பிரச்சனையாகும்.
ஏனென்றால் இந்த ஏவுகணையின் ரேஞ்ச், துல்லியமான தாக்குதல், குறைந்த உயரத்தில் பறந்து இலக்கை அழிப்பது உள்ளிட்டவை துருக்கிக்கு பெரும சிக்கலாக மாறும். அதுமட்டுமின்றி இந்த ஏவுகணை துருக்கியில் உள்ள எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை மீறி தாக்கும்.
இந்த ஏவுகணை, 1,000 முதல் 1,500 கிலோமீட்டர் ரேஞ்சை கொண்டுள்ளது. வெடிமருந்துகள் மட்டுமின்றி அணுஆயுதத்தையும் சுமந்து செல்லும் வல்லமை கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் டோமாஹாக் மற்றும் ரஷ்ய காலிபர் கப்பல் ஏவுகணைக்கு நிகராக பார்க்கப்படுகிறது.
இதனை மொபைல் ஆர்டிகுலேட்டட் லாஞ்சர்கள் மற்றும் கடற்படை கப்பல்களில் இருந்து ஏவ முடியும். இதனால் கிரீஸ் நாட்டுக்கு இந்தியாவின் இந்த ஏவுகணை கிடைத்தால் அது துருக்கிக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட கிரீஸ் நாட்டுக்கு இந்தியா சார்பில் எல்ஆர் - எல் ஏசிஎம் ஏவுகணைகளை வழங்குவது பற்றி இருநாடுகள் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் கடந்த மாதம் இந்திய விமானப்படை விங் கமாண்டர் ஏ.பி. சிங் கிரீஸ் நாட்டின்தென்ஸ் நகருக்கு சென்றார். அப்போது அவர் கிரீஸ் நாட்டின் விமானப்படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (பி) டிமோஸ்தெனிஸ் கிரிகோரியாடிஸை சந்தித்து பேசினார். அதன்பிறகு DEFEA-25 பாதுகாப்பு துறை கண்காட்சியின் போது நம் நாட்டின் எல்ர் - எல் ஏசிஎம் ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது. இதனால் இந்த ஏவுகணை தொடர்பாக இந்தியா - கிரீஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் எட்டப்படலாம். இது நடக்கும் பட்சத்தில் துருக்கியின் தூக்கம் நிச்சயம் நம் நாட்டால் கலையும் என்பதில் ஐயமில்லை












Click it and Unblock the Notifications