ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் திடீர் முடக்கம்! என்ன காரணம் தெரியுமா
டெல்லி: நாட்டின் முக்கிய செய்தி ஏஜென்சிகளில் ஒன்றான ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் (ஏஎன்ஐ) கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைகளில் சென்றதில் இருந்தே பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. மஸ்க் கொண்டு வரும் பல மாற்றங்கள் பயனாளர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.
இருப்பினும், ட்விட்டரை அதிக விலை கொடுத்து வாங்கிய மஸ்க் இதை எப்படியாவது லாபகரமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதற்காகவே அவர் இதுபோன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகிறார்.

ப்ளூ டிக்: சமீபத்தில் கூட ப்ளூ டிக் விவகாரத்தில் பெரிய குழப்பமே ஏற்பட்டது. முதலில் ட்விட்டர் நிறுவனம் முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அவர்கள் கணக்கை எளிதாக அடையாளம் காண ப்ளூ டிக் வழங்கியது. இருப்பினும், அதில் இருந்து வருமானம் ஈட்ட நினைத்த மஸ்க், ப்ளூ டிக் பெற 8 டாலர் கட்ட வேண்டும் என்றார். இதனால் முதல்வர் ஸ்டாலின், கோலி எனப் பல பிரபலங்களும் ப்ளூ டிக் ஆப்ஷனை இழந்தனர். இருப்பினும், சில நாட்களில் மீண்டும் ப்ளூ டிக் வந்துவிட்டது. இதுவே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.
இப்படிப் பல விஷயங்களை ட்விட்டர் செய்து கொண்டிருக்கிறது. இதனிடையே இப்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தை ட்விட்டர் தனது தளத்தில் இருந்து பிளாக் செய்துள்ளது. ட்விட்டரில் இயங்க குறைந்தபட்ச வயது வரம்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி ஏஎன்ஐ கணக்கை ட்விட்டர் லாக் செய்துள்ளது.
ஏஎன்ஐ: ட்விட்டர் தளத்தில் ஏஎன்ஐ தளத்தைத் தேடினால், 'This account doesn't exist' என்றே வருகிறது. ANI ட்விட்டர் கணக்கை 13-வயது கீழே உள்ளவர் தொடங்கியதாகக் கூறி முடக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் இருந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மெயிலும் அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அந்த மெயிலில், "ட்விட்டர் கணக்கை உருவாக்க, உங்களுக்குக் குறைந்தபட்சம் 13 வயது இருக்க வேண்டும். இந்த வயதுத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளோம். எனவே, உங்கள் ட்விட்டர் கணக்கு லாக் செய்து, ட்விட்டரில் இருந்து நீக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்: இது தொடர்பாக ஏஎன்ஐ எடிட்டர் ஸ்மிதா பிரகாஷ் கூறுகையில், "சுமார் 76 லட்சம் பாலோயர்ஸ்களை கொண்ட ஏஎன்ஐ பக்கத்தை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. 13 வயதுக்குப்பட்டோரது கணக்கு என்று சொல்லி முடக்கியுள்ளனர். கோல்டன் டிக்கை நீக்கிவிட்டு நீல நிற டிக் தரப்பட்டு கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
தெற்காசியாவின் முன்னணி மல்டிமீடியா செய்தி நிறுவனமான ஏஎன்ஐ நிறுவனத்திற்கு இந்தியா, தெற்காசியா மற்றும் உலகம் முழுவதும் செய்தியாளர்களைக் கொண்டு இருக்கிறது.

எலான் மஸ்க்: ட்விட்டர் நிறுனம் எலான் மஸ்க் கைகளில் சென்றது இருந்து இப்படி பல பிரச்சினைகள் அதில் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது. அங்கே ஆட்குறைப்பு காரணமாகப் பொறியாளர்களும் போதியளவில் இல்லாத நிலையில், ட்விட்டர் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications