நாசவேலையில் ஈடுபட திட்டம்? பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழ்நாட்டு இளைஞர் கைது.. டெல்லியில் ஷாக்

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளால் சமூக வலைதளம் வாயிலாக மூளைச்சலவை செய்யப்பட்ட சிலர், மும்பை வழியாக டெல்லி வருவதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாருக்கு கடந்த 14-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பயங்கர நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தானுக்கு ஆயுதப்பயிற்சி பெற சென்ற தமிழக இளைஞர் உட்பட இருவரை டெல்லி போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

எந்த தீவிரவாத இயக்கத்தினரால் இவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள்.. இந்தியாவில் என்னென்ன நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டார்கள் என்பது குறித்து, அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்தியாவில் வேறு யார் யாரெல்லாம் இதுபோன்று மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீவிர கண்காணிப்பில் என்ஐஏ

தீவிர கண்காணிப்பில் என்ஐஏ

கோவையில் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. முதல்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ), 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் மீது என்ஐஏ அதிகாரிகளின் பார்வை திரும்பியிருக்கிறது.

 ரகசிய தகவல்

ரகசிய தகவல்

இந்த சூழலில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளால் சமூக வலைதளம் வாயிலாக மூளைச்சலவை செய்யப்பட்ட சிலர், மும்பை வழியாக டெல்லி வருவதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாருக்கு கடந்த 14-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. டெல்லி வரும் அவர்கள், அங்கிருந்து காஷ்மீர் சென்று பின்னர் பாகிஸ்தானுக்குள் செல்லவிருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, டெல்லியின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்..

தமிழகத்தைச் சேர்ந்தவர்..

இந்நிலையில், டெல்லி செங்கோட்டை பகுதிக்கு பின்புறம் உள்ள சுற்றுச்சாலையில், சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 இளைஞர்கள் சுற்றித்திரிவதை போலீஸார் பார்த்தனர். இதையடுத்து, அவர்களை மடக்கி பிடித்த போலீஸார், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (26) மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த காலித் முபாரக் கான் (21) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், ஒரு கத்தி, கம்பியை துண்டிக்கும் கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 தீவிர விசாரணை

தீவிர விசாரணை

இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறுகையில், "சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இவர்களுக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. பின்னர், இவர்களை தீவிரவாதிகள் மூளைச்சலவை செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக, பாகிஸ்தானுக்கு சென்று ஆயுதப்பயிற்சி பெறவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அறிவுறுத்தலின்படி, காஷ்மீர் மார்க்கமாக பாகிஸ்தான் செல்வதற்காக அவர்கள் டெல்லி வந்துள்ளனர். எந்த தீவிரவாத இயக்கத்தினரால் இவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள்; இந்தியாவில் என்னென்ன நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டார்கள் என்பது குறித்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+