கல்லூரி மாணவர்களுக்கும்.. இனி மும்மொழி கட்டாயம்! பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு!
டெல்லி: புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்திருந்தது. பள்ளிகளில் மட்டும்தான் மும்மொழி என கருதிக்கொண்டிருந்த நிலையில், இனி அனைத்து கல்லூரிகளிலும் மும்மொழியை கற்பிக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டிருக்கிறது.
இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களையும் ஒரு இந்திய மொழியை கற்க ஊக்குவிக்க வேண்டும் என்று மானியக் குழு தனது உத்தரவில் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து யுஜிசி வழங்கியுள்ள வழிகாட்டுதலில், மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அதனுடன் இணைப்புக் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட அனைத்தும், மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியுடன் கூடுதலாக ஒரு இந்திய மொழியையும் கற்க வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் பயிலும் மாணவர்களும் மூன்றாவது மொழியை கற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பை யுஜிசி செயலாளர் மனிஷ் ஜோஷி வெளியிட்டிருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமான, பன்மொழித் தன்மை மேம்பாட்டிற்காக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020, தேசிய ஒருமைப்பாடு, அனைவருக்கும் வளர்ச்சி ஆகியவற்றுக்காக பன்மொழி திறன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அதாவது, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம் எனும் திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் வெறுமன மற்றொரு இந்திய மொழிகளை கற்பதை தாண்டி, கலாச்சார புரிதல் பயன்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் பரவலாக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான வழிகாட்டுதல்களை பொறுத்தவரையில், உயர்கல்வி நிறுவனங்கள் இந்திய மொழிகள் குறித்த படிப்புகளை கிரெடிட் ஸ்கோர் வாயிலாக வழங்கி, மாணவர்களை கற்க ஊக்குவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒரு உள்ளூர் மொழி மற்றும் அட்டை வனப்படுத்தப்பட்ட 22 இந்திய மொழிகளில் ஏதேனும் இரண்டு மொழிகள் என குறைந்தது மூன்று மொழிகளை கற்பிக்கலாம். இந்த நிறுவனங்கள் இந்த படிப்புகளை ஆரம்ப நிலை, இடைநிலை மற்றும் முதன்மை என மூன்று விதமாக கொடுக்கலாம்.
மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பணியாளர்களும் மூன்றாவது மொழியில் படிக்கலாம். இந்த படிப்புக்கான வயது வரம்பு 16 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படிப்புகளை நேரடி மற்றும் ஆன்லைன் வாயிலாக வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications