டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீதி கிளப்பும் புதுவகை வைரஸ்: இங்கிலாந்து உடனான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்த இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: இங்கிலாந்தில் மின்னல் வேகத்தில் பரவும் புது வகை கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளிடையே மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் மற்றும் இங்கிலாந்து வரும் அனைத்து விமானங்களும் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    இந்தியாவில் என்ட்ரி… இங்கிலாந்தின் புது வைரஸ்.. தெரிய வேண்டிய முக்கிய விஷயங்கள்..!

    கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கலே அது ஒவ்வொரு முறையும் தன்னை பல்வேறு வகைகளில் உரு மாற்றிக்கொண்டே இருப்பது தான். இப்போது தான் இங்கிலாந்து கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துவங்கி ஆறுதல் அடைந்தது.

    ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கு புதிய வகை வைரஸ் காரணமாக நோய்த் தொற்று வேகமாக பரவுகிறது என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கான (இங்கிலாந்துக்கான) விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன

    அமெரிக்காவை கலங்கவைத்த கொரோனா பலி.. ஐரோப்பா முழுவதும் மின்னல் வேகம்.. உலக நாடுகள் திகைப்பு! அமெரிக்காவை கலங்கவைத்த கொரோனா பலி.. ஐரோப்பா முழுவதும் மின்னல் வேகம்.. உலக நாடுகள் திகைப்பு!

    பெல்ஜியம்

    பெல்ஜியம்

    இதேபோல் பிரிட்டனில் இருந்து தங்கள் நாட்டுக்கு விமான சேவைகள் இயக்கப்படுவதற்கு நெதர்லாந்து தடைவிதித்துள்ளது. பெல்ஜியம் இதே நடைமுறையை பின்பற்ற போவதாக அறிவித்து இருந்தது.

    ஐரோப்பிய நாடுகள்

    ஐரோப்பிய நாடுகள்

    பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜெர்மனியும் தடை விதித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் மற்றொரு வகையான வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து வரும் விமானங்களுக்கும் தடை விதிக்க உள்ளதாகவும் ஜெர்மனி கூறியிருந்தது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளே பிரிட்டனை தனிமைப்படுத்தி வருவதால், பிரிட்டனிலிருந்து எந்தவிதமான போக்குவரத்தும் வைத்துக் கொள்ள வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

    தடை விதித்து

    தடை விதித்து

    இதற்கிடையே ஐரோப்பிய நாடுகள் வரிசையில் இந்தியாவும் இங்கிலாந்து செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதேபோல் இங்கிலாந்தில் இருந்து வரும் விமான சேவைகளையும் உடனடியாக ரத்து செய்துள்ளது.

    விமான சேவை

    விமான சேவை

    விமான போக்குவரத்துத்துறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இங்கிலாந்தில் உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இன்று நள்ளிரவு 12 மணி முதல் (22ம் தேதி) இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல் இந்தியாவில் இருந்தும் இங்கிலாந்துக்கு விமான சேவைகள் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

    English summary
    Considering the prevailing situation in the UK, Indian govt has decided that all flights originating from the UK to India shall be temporarily suspended till 11:59 pm, 31st December. This suspension to start w.e.f. 11.59 pm, 22nd December: Ministry of Civil Aviation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X