சக்திவாய்ந்த தலைவர் மோடியால் முடியும்.. புதினுக்கு போனை போட்டு போரை நிறுத்த வேண்டும்: உக்ரைன் தூதர்
டெல்லி: ‛‛ரஷ்யாவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல உறவு உள்ளது. இதனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அவர் தொடர்பு கொண்டு பேச வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியால் இந்த பிரச்சனையில் சிறப்பான பங்களிப்பு செய்ய முடியும்'' என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகார் பொலிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்துகிறது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதற்கிடையே உக்ரைனில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர். பிற நாடுகளை சேர்ந்தவர்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைனும் பிற நாடுகளின் உதவியை கோரி வருகிறது.

மோடியின் தொடர்பு
இந்நிலையில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகார் பொலிகா இந்தியாவிடம் உதவி கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‛‛ரஷ்யா உடன் இந்தியாவுக்கு சிறப்பான உறவு உள்ளது. உக்ரைனில் நிலவும் தற்போதைய சூழலை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியும். பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை தொடர்பு கொள்ள வேண்டும். தற்போதைய அசாதாரணமான சூழலுக்கு ஆக்கிரமிப்பு பிரச்னையே பிரதானமாக உள்ளது.

உயிர் பலி
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் ராணுவ மையங்களை மட்டும் தாக்கியதாக ரஷ்யா பொய் கூறுகிறது. உண்மையில் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். எல்லையை தாண்டி ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளன. உக்ரைன் படைகள் சார்பில் 5 ரஷ்ய விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் பங்களிப்பு
இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக உள்ளது. இது உலகளாவிய அமைப்பாகும். இந்தியாவின் ஆதரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஒரு ஜனநாயக நாட்டின் மீது சர்வாதிகார ஆட்சி செய்யும் நபர் நடத்தும் தாக்குதலை தடுக்க இந்தியா தனது உலகளாவிய பங்கை முழுமையாக ஏற்று கொள்ள வேண்டும்.

சக்தி வாய்ந்த தலைவர்
உலகில் சக்தி வாய்ந்த, மரியாதைக்குரிய தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். ரஷ்யாவுடன் சிறப்பான உறவை கொண்டுள்ளார். எந்த தலைவர் கூறினால் புதின் கேட்பார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நரேந்திர மோடி இதில் சிறப்பான பங்களிப்பை செய்ய முடியும். ஏனென்றால் ரஷ்யாவுடன், மோடிக்கு நல்ல உறவு உள்ளது. இந்திய அரசின் சாதகமான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இது உண்மையின் தருணம், விதியின் தருணம்" என கூறியுள்ளார்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications