முக்கியமான நகர்வு.. அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அசாமின் உல்ஃபா அமைப்பு.. அமித் ஷா பெருமிதம்!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் உல்ஃபா அமைப்பின் ராஜ்கோவா பிரிவு மத்திய அரசு மற்றும் அசாம் அரசுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அசாமை தனி நாடாக அறிவிக்க வேண்டும், அசாமின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும், அசாம் மக்களுக்கான நில உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உல்ஃபா (ULFA - ஐக்கிய விடுதலை முன்னணி ) அமைப்பு 1979ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்திப் போராடி வந்தது.

1980களில் உல்ஃபா அமைப்பின் தீவிரமான செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்ட மோதல்களில் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள், உல்ஃபா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 1990ல் உல்ஃபா அமைப்பு தடை செய்யப்பட்டது. உல்ஃபா அமைப்பின் ஆயுதச் செயல்பாடு காரணமாக சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு, உல்ஃபா அமைப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மத்திய அரசும், அசாம் மாநில அரசும் உல்ஃபா அமைப்பினருடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. உல்ஃபா அமைப்பின் அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான பிரிவினர், கிளர்ச்சி நடவடிக்கைகளை கைவிட சில கோரிக்கைகளை முன்வைத்தனர். உல்ஃபா ஆயுதக் குழுவினரின் பல்வேறு கோரிக்கைகள் அரசால் ஏற்கப்பட்டதை அடுத்து, அமைதி உடன்படிக்கை டெல்லியில் இன்று கையெழுத்தானது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான கூட்டம் நடைபெற்றது. உல்ஃபா அமைப்பைச் சேர்ந்த அரபிந்த ராஜ்கோவா பிரிவின் 16 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுகுறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உல்ஃபா தொடர்பான மோதல்களால் 1979 முதல் தற்போது வரை சுமார் 10,000 உயிர்களை இழந்த நிலையில், அசாம் ஏராளமான துன்பங்களை சந்தித்துள்ளது. அசாமின் எதிர்காலத்துக்கு இது ஒரு பொன்னாள். அசாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நிலவி வந்த வன்முறை இதன்மூலம் முடிவுக்கு வந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “உல்ஃபா அமைப்பு தரப்பிலும் இந்த ஒப்பந்தம் குறித்து நம்பிக்கை தெரிவித்தனர். எங்கள் தரப்பில் ஏதாவது தவறு நடந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வன்முறைச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் இது” எனத் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications