"15,700 மரணங்கள்.." அதுவும் சில மாதங்களில்! வெப்ப அலையை சாதாரணமா நினைக்காதீங்க! வார்னிங் தரும் WHO
டெல்லி: கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப அலை இப்போது உலகில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், இது குறித்து ஐநா சபை மிக முக்கியமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கோடைக் காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்ற போதிலும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சமீப காலங்களில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டே வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
வெப்ப அலை: மேலும், இந்த வெப்பநிலை உயரும் பாதிப்பு ஏதோ ஒரு நாட்டிற்கு மட்டுமே ஏற்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக உலகின் அனைத்து பகுதிகளும் இந்த பருவநிலை மாற்றத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் தொழிற்சாலைகளுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும் அங்கும் பருவநிலை பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதே இதற்குச் சிறந்த உதாரணம் ஆகும்.
கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், உலகில் பல பகுதிகளில் வறட்சி, வெள்ளம் மற்றும் வெப்ப அலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இது சர்வதேச அளவில் பல ஆயிரம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றனர். ஐநா சபையின் நிறுவனமான உலக வானிலை அமைப்பு கடந்த 2022இல் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய மூன்று கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றம் 2022இல் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

மோசமான பாதிப்பு: வறட்சி, வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அண்டார்க்டிக் கடல் முன் எப்போதும் இல்லாத பகுதிகளிலும் கூட பனிப்பாறைகள் உருகியுள்ளன. இதனால் கடல் நீர் மட்டமும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உலகின் சராசரி வெப்பமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 1850- 1900 வரை பதிவான வெப்பத்தைக் காட்டிலும் 2022இல் 1.5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்துள்ளது.
கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம், காலநிலை மாற்றம், ஆகியவை உலகெங்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டில், கிழக்கு ஆபிரிக்காவில் பெரிய வறட்சி, பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை மற்றும் சீனா மற்றும் ஐரோப்பாவில் வெப்ப அலைகள் ஆகியவை பல கோடி மக்களைப் பாதித்தன. மேலும், பல இடங்களில் இது உணவுப் பாதுகாப்பின்மையையும் தூண்டியது. இதனால் மக்கள் இடம்பெயர்ப்பு அதிகரித்த நிலையில், பல கோடி இழப்பும் ஏற்பட்டது.
இந்தியாவில் என்ன பாதிப்பு: இதில் இந்தியா குறித்தும் சில முக்கிய பாயிண்ட்கள் உள்ளன. அதாவது, "இந்தியா மற்றும் பாகிஸ்தானில் 2022இல் பருவமழைக்கு முன்பு ஏற்பட்ட வெப்ப அலை பயிர் விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தியது. உக்ரைன் மோதல், இந்தியாவில் கோதுமை ஏற்றுமதி தடை, அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உணவுப் பொருட்கள் கிடைப்பதையே சிக்கலில் தள்ளியது. இது ஏற்கனவே உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மிகப் பெரிய ஆபத்தைத் தரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வறட்சி ஒரு பக்கம் என்றால், இந்தியாவில் பருவமழைக் காலத்தில் பல்வேறு கட்டங்களில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, குறிப்பாக ஜூன் 2022 இல் வடகிழக்கில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பருவத்தில் 700க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் 900 மின்னலினால் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புகள்: அனைத்து நாடுகளையும் விடச் சீனாவில் தான் மிக மோசமான வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. அங்கே வெப்ப அலை கோடைக் காலத்தைத் தாண்டியும் நீட்டித்துள்ளது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை அங்கே வெப்ப அலையால் மட்டும் 15,700 மரணங்கள் பதிவாகியுள்ளது. ஸ்பெயினில் சுமார் 4,600 பேர், ஜெர்மனியில் 4,500 பேர், இங்கிலாந்தில் 2,800 பேர், பிரான்சில் 2,800 பேர் மற்றும் போர்ச்சுகலில் 1,000 பேர் வெப்ப அலை ஏற்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications