வால் ஆட்ட தொடங்கியது பாக்.! ஒட்ட நறுக்க இந்தியா ரெடி! பஞ்சாப், ராஜஸ்தானில் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக பாகிஸ்தான் அறிவிக்கப்படாத போரை தொடங்கியுள்ளது. தற்போது காஷ்மீர் மீது வான் வழியாக தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபுக்கு உட்சபட்ச அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரு மாநிலங்களிலும் பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவை தாக்க பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எளிதான வழிகளாகும். எனவேதான் இந்த இரண்டு மாநிலங்களும் அலர்ட் நிலையில் இருக்கிறது.

Punjab Rajasthan pakistan india Pakistan

பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் காரணமாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பஞ்சாபில் குருதாஸ்பூர் மாட்டத்தில் இரவு 9 மணிக்கு தொடங்கி, அதிகாலை 5 மணிவரை மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு 1968 ஆம் ஆண்டு குடிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இங்கு மத்திய சிறைச்சாலையும், முக்கியமான மருத்துவமனைகளும் இருக்கின்றன.

இது இரண்டுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஜன்னல்களை மூடி, தேவையில்லாத விளக்குகளை அணைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல இம்மாநிலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. விடுப்பில் உள்ள அனைத்து காவலர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், ராணுவத்துடன் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

ராஜ்தானை பொறுத்தவரை, பிகானேர், ஜெய்சல்மார், ஸ்ரீ கங்காநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. எல்லையை ஒட்டிய பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஏற்கெனவே கணிக்கப்பட்ட விஷயம்தான். எனவே பதிலடிக்காக இந்த பகுதியில் ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+