பயங்கர சத்தத்துடன்.. இடிந்த 3 மாடி கட்டிடம்.. 2 பேர் பலி.. 5 பேர் உயிருடன் மீட்பு.. டெல்லி பரபரப்பு
டெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்
டெல்லி: டெல்லியில் 3 மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்...!
டெல்லியின் தெற்கு டெல்லி பகுதியில் சந்தியா நிகேந்தன் என்ற இடம் புகழ்பெற்றதாகும்.. இந்த பகுதியில்தான் ஏராளமான விஐபிக்கள் வசித்து வருகிறார்கள்..
ஏராளமான அப்பார்ட்மென்ட்கள் இந்த பகுதியில் காணப்படும்.. எந்நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் பிஸியாகவும் இருக்கும்.

மதிய நேரம்
இங்குள்ள 3 மாடி கட்டிடம் ஒன்றில் சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.. இன்றும் தொழிலாளர்கள் வழக்கம்போல, கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.. அப்போது மதிய நேரம், திடீரென எதிர்பாராத நேரத்தில், இந்த கட்டிடம் மளமளவென இடிந்து விழுந்தது. சின்டெல்ஸ் பாரடிசோவின் 18 மாடி டவர் D-ல் உள்ள அப்பார்ட்மென்ட்டில்தான் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.

இடிபாடுகள்
இதுதொடர்பாக அருகில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கித்தவித்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டார்கள்.. எனினும் 2 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் வேலை செய்து கொண்டிருந்த மேலும் 5 கட்டிட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்..

3 மணி நேரம்
அவர்களை, பல மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.. இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருந்த ஒருவரை மட்டும், கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராடி மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.. தீயணைப்பு படையினருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சேர்ந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா என்று தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது..

அரவிந்த் கெஜ்ரிவால்
இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்த தெற்கு டெல்லி முகேஷ் சூரியன் நேரில் விரைந்து வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.. மேலும் நடந்த சம்பவம் தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்... மாவட்ட நிர்வாகம், நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், பணிகளை தான் கண்காணித்து வருவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications