Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயமா இருக்கு! பொது சிவில் சட்டமே தேவையில்லாதது! கொதித்த சீக்கிய அமைப்பு! பாஜகவுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் அமைப்புகளை போல் முக்கிய சீக்கிய அமைப்பான எஸ்ஜிபிசி கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு பயத்தை உருவாக்கி உள்ளது. இந்த சட்டம் தேவையில்லாதது எனக்கூறியுள்ள அந்த அமைப்பு மத்திய பாஜக அரசுக்கு பகிரங்கமாக எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது. வெவ்வேறு சாதி, மதங்களை சார்ந்த மக்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரே மாதிரியான சட்டத்தை அறிமுகம் செய்வதே இதன் நோக்கமாகும்.

Uniform Civil Code is an apprehension of minorities, says Sikh organisation SGPC and strongly opposed

பொது சிவில் சட்டத்துக்கும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இதனால் 2வது முறையாக சட்ட கமிஷன் கருத்து கேட்பு நடத்தி வருகிறது. பொதுமக்கள், மதம்சார்ந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

விரைவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் அதில் மசோதா நிறைவேற்றப்பட்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கிடையே தான் பொது சிவில் சட்டத்தை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

மேலும் இஸ்லாமிய அமைப்புகளும் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் தான் பொது சிவில் சட்டத்துக்கு முக்கிய சீக்கிய அமைப்பான சிரோமணி குருத்வாரா பர்பந்தாக் கமிட்டி (எஸ்ஜிபிசி) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி தலைமையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறியதாவது:

மத்திய பாஜக அரசு நாட்டுக்கு தேவையில்லாத பொது சிவில் சட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக உள்ளது. இத்தகைய சூழலில் இது தேவையில்லாதது. ஏனென்றால் பொது சிவில் சட்டம் என்பது நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்களின் அடையாளம், ஒரிஜினாலிட்டி, கொள்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது.

அதோடு சிறுபான்மை மக்களின் மதசடங்கு, பாரம்பரியம், கலாசாரம் உள்ளிட்வற்றுக்கு அடக்கும் நிலை ஏற்படலாம். மேலும் பொது சிவில் சட்டம் மூலம் சீக்கியர்களின் ஆடை அணியும் முறை, குர்பானி முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறோம்'' என எச்சரிக்கை செய்துள்ளார்.

பொது சிவில் சட்டத்துக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் சீக்கிய அமைப்பான எஸ்ஜிபிசியும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்பு பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது இது முதல் முறையல்ல. இதற்கும் முன்பும் இந்த சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தது.

குறிப்பாக 2022 நவம்பர் 17 ம் தேதி இந்த அமைப்பு சார்பில், ‛‛பொது சிவில் சட்டம் என்பது ஆர்எஸ்எஸ் உத்தரவின் பேரில் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், இந்து நாட்டை உருவாக்கும் வகையிலும் உள்ளது'' என விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+