ஜூலை 14-ல் கெடு முடிவடைகிறது.. பொது சிவில் சட்டம் குறித்து 46 லட்சம் கருத்துகளை பெற்ற சட்ட ஆணையம்!
டெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பாக ஜூலை 10-ந் தேதி வரை மொத்தம் 46 லட்சம் கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றிருக்கிறது. பொது சிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க ஜூலை 14-ந் தேதி கடைசி நாளாகும்.
பொது சிவில் சட்டம் தொடர்பாக நாடு விடுதலை அடைந்தது முதலே விவாதிக்கப்பட்டு வருகிறது. பாஜகா எனும் கட்சி உருவான காலந்தொட்டே அதன் முதன்மை கொள்கைகளில் ஒன்றாக பொது சிவில் சட்டம் முன்வைக்கப்படுகிறது. பொது சிவில் சட்டம் குறித்து அவ்வப்போது விவாதங்கள் எழுந்தாலும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலின் படி பொது சிவில் சட்டம் அவசியமானது என்கிற கருத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து 22-வது சட்ட ஆணையமானது கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியன்று, பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் இருந்து பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என முந்தைய சட்ட ஆணையம் ஆணித்தரமாக கூறிய நிலையில் சட்ட ஆணையத்தின் தற்போதைய முயற்சி கடுமையாக விமர்சிக்கப்படும் வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே ஜூலை 10-ந் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்து சட்ட ஆணையத்திடம் 46 லட்சம் கருத்துகள் சென்றடைந்துள்ளன. ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை சட்ட ஆணையம் பெறும் என ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இந்த கெடு முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன.
திமுக நிலைப்பாடு: இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் பொது சிவில் சட்டம் தொடர்பான தனது கருத்தை இன்று சட்ட ஆணையத்துக்கு அனுப்பியது. திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அனுப்பிய கடிதத்தில், பொது சிவில் சட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும். ரசமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானதல்ல. மதங்களுக்கிடையேயான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன், ஒன்றிய அரசு இந்துமத சாதிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதீய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications