ராணுவத்துக்கு தாராளம்.. ரூ.7.85 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு.. கதறப்போகும் பாகிஸ்தான்
டெல்லி: மத்திய அரசு பாதுகாப்பு துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடியை ஒதுக்கிடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட பலமடங்கு அதிகமாகும். பாகிஸ்தான், வங்கதேசம், சீனா உடனான மோதல் காரணமாக மத்திய அரசு அதிரடியாக ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு தாராளம் காட்டி உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மத்திய பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
ரூ.7.85 லட்சம் கோடி
நம் நாடு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க ராணுவம், விமானப்படை, கடற்படைகள் தான் முக்கிய காரணம். இதனால் தான் எப்போதுமே மத்திய பாதுகாப்பு துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த முறையும் மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு நிர்மலா சீதாராமன் தாராளம் காட்டி உள்ளார்.
அதன்படி மத்திய பாதுகாப்பு துறைக்கு இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ.7.85 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிகமாகும். ஏனென்றால் கடந்த ஆண்டு மொத்தம் ரூ.6.81லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.இப்போது அதனை விட கூடுதலாக ரூ.1.04 லட்சம் கோடி மத்திய பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது 15 சதவீதம் அதிகமாகும்.
எந்தெந்த பணிக்கு எவ்வளவு நிதி?
இந்த நிதியில் ராணுவ தளவாடங்களை நவீனப்படுத்த ரூ.2.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.1.80 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோல், ராணுவ பராமரிப்பு மற்றும் செயல்பாடு உள்ளிட்ட அன்றாட செலவுக்கு ரூ.2,65,478 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராணுவ ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.1.17 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?
இதுபற்றி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‛‛பாதுகாப்பு துறைக்கான மூலதனச் செலவினம் 28% உயர்ந்து ரூ.2.31 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.1.80 லட்சம் கோடியாக இருந்தது. மேம்பட்ட ஆயுத அமைப்புகளை வாங்குவதையும், உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதையும் அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பு குறைந்துள்ளது. பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு 2015-16ல் ரூ.2.94 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது 2026-27 நிதியாண்டில் ரூ.7.85 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நவீனமயமாக்கலுக்கான மூலதன செலவினமும் ரூ.83,614 கோடியிலிருந்து ரூ.2.31 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது'' என்று கூறினார்.
உள்நாட்டு தயாரிப்புக்கு டார்க்கெட்
மேலும் பாதுகாப்பு துறையில் இறக்குமதி செய்யப்படும் போர் விமான உதிரி பாகங்களுக்கு அடிப்படைசுங்கவரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் தற்சா்ர்பு நிலையை அடையவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்கவும் இந்த பட்ஜெட் உந்துதலாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நம் அண்டை நாடுகள் நம்மை சீண்டி வருகின்றன. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்தல்கள் நமக்கு தொடர்ந்து உள்ளன. பாகிஸ்தானுடன் கடந்த மே மாதம் 3 நாட்கள் போர் ஏற்பட்டது. இதில் நம் நாட்டின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் மண்டியிட்டது.
அண்டை நாடுகளால் அச்சுறுத்தல்
அதேபோல் நட்பாக இருந்த வங்கதேசம் நம்மை சீண்டி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் சீனாவும் நமக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி வருகிறது. திடீரென்று இந்த நாடுகள் நம்மை சீண்டலாம். அதுமட்டுமன்றி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து நம்மை மிரட்டி வருகின்றனர்.
இதுதவிர உலக நாடுகள் பலவும் ஒன்றுக்கொன்று மோதி வருகின்றன. இதனால் நம் நாட்டின் பாதுகாப்பு துறையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதனை மத்திய அரசு உணர்ந்து தான் கடந்த ஆண்ட விட இந்த மறை ரூ.7.85 லட்சத்தை மத்திய பாதுகாப்பு துறைக்கு வாரி வழங்கி உள்ளது. இந்த நிதியின் மூலமாக நம் நாட்டின் பாதுகாப்பு துறை மேலும் வலுவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications